* பின்னிணைப்பு
257
மறைமலையடிகளாரின் மணி மொழிகள் 1. தனித் தமிழ்
தமிழரனைவரும் பண்டுபோல் தமக்கும் தம் இல்லங் களுக்கும், தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் எல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டுமன்றி வடமொழி முதலான வேற்றுமொழிச் சொற்களைப் பெயர்களாக அமைத்தல் ஆகாது.
இசை-தமிழ்ச்சொல், இராகம்-வடசொல், இராகம் என்றால் தான் பெரும்பாலான மக்கட்குத் தெரிகிறது. ஆதலால், இராகம் என்று சொல்லித்தான் இசையைப்பற்றி விளக்க வேண்டிய மானக்கேடான நிலை தமிழர்களுக்கு உண்டாகியிருக்கிறது.
தமிழிற் பயன்படும் நூல்கள் எழுதும் அறிஞர் எல்லாரும் அயன்மொழிச் சொற்களைத் தம்மால் இயன்ற மட்டும் விலக்கித் தூய தமிழிலே எழுதப்பழகுவராயின், அதனால் நம் செந்தமிழ் மொழி வளம்மிகப் பல்கித் துலங்குவதோடு அதனைத் துலக்கும் அவர்க்கும் அழியாப் புகழும் அறமும் உண்டாமென்க.
தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்பு போல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள்! அடியேன் உங்களைப் பெரிதும் கெஞ்சுகின்றேன். ஆண்டவர்களே! தமிழைக் கெடுக்காதீர்கள்! தனித் தமிழுக்குப் பாடுபடுங்கள்.
தமிழ் மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும்.
தமிழ் முன்னோர் தமது மொழியைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்தாய் எல்லாவளனும் நிரம்ப வளர்த்து