உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

259

கருத்தாய் எவ்வளவு அன்பாய்ப் பாதுகாத்து நின்றனர் என்பது தெற்றென விளங்கா நிற்கும். இம் முன்னாசிரியர் நூல்களிற் நூற்றுக்கு ஒன்று இரண்டு விழுக்காடுகூட வடசொற்களைக் காண்டலரிது.

தமிழானது மிகுந்த சொல்வள முடையது. தமிழையும், பிற மொழிகளையும் நடுவு நின்று நன்கு ஆராய்ந்த கால்டுவெல் முதலான மேனாட்டாசிரியர்கள், தமிழானது பிறமொழிகளின் உதவியைச் சிறிதும் வேண்டாமல் எல்லாத் துறைகளிலும் தனித்தியங்க வல்லது என்றும், ஆங்கிலம் முதலான மற்ற மொழிகளோ, பிற மொழிகளின் உதவியை வேண்டாமல் தனித்தியங்க மாட்டாதனவென்றும், தமிழானது பிறமொழிக் கலப்பின்றித் தூயதாக எழுதப்படும்போதும், பேசப்படும் போதும் மிக்க அழகுடையதாய்ப் பிறருள்ளத்தைக் கவருந் தன்மையதாய் விளங்குகின்ற தென்றும் வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் சொல்லிய அவ்வுண்மை எல்லாப் பொருள்களையும் தனித்தமிழில் எடுத்துரைக்குந் திருக்குறள் என்னும் ஒரு நூலைப் பார்த்தாலும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதுவும் போதாதேல், திருக்குறளின் காலத்தும் அதற்கு முற்பட்ட காலத்தும், இயற்றப் பட்ட பழைய செந்தமிழ் நூல்களைப் பார்த்தால் தமிழின் சொல்வளம், பொருள்வளம் நன்கு விளங்கும். இவ்வளவு சிறந்த தமிழ் மொழியைப் பேசிய பழைய தமிழ் மக்கள் எவ்வளவு சிறந்த நாகரிகம் வாய்ந்தவர்களாயும், பிற மொழியாளர்களுக்கும், அவர்களுடைய சொற்களுக்கும் அடிமைப்படாத எவ்வளவு தனிப்பெருஞ் சிறப்பு உடையவர்களாயும் யவர்களாயும் இருந்திருக்க வேண்டும்.

ஒருவர் உண்மையிலேயே தமிழை வளர்க்கும் எண்ணமுடை யவராயிருந்தால், மக்கட் கூட்டம், மக்களினம், மக்கள் தொகுதி முதலான தமிழ்ச் சொற்களிருப்ப அவற்றை யெல்லாம் விட்டு ‘மனித சமூகம்' என்ற வடசொல்லை எழுதுவாரா? கடலூர்வாணர் என்னுந் தமிழ்ச் சொல்லிருக்கக் கடலூர் வாசி' என்று எழுதுகின்றனர். விடை யென்னுந் தமிழுக்குப் ‘பதில்’ என்னுந் துலுக்குச் சொல்லை

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/290&oldid=1577774" இலிருந்து மீள்விக்கப்பட்டது