உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் 6

4. திருக்கோயில்கள்

முற்காலத்தில் தமிழர்கள் திருக்கோயிலில் உள்ள திருவுருவங்களைத் தாமே தொட்டு நீராட்டிப் பூவிட்டு அகில் புகைத்துச் சூடங் கொளுத்தி வழிபட்டு வந்தார்கள். இஞ் ஞான்றும் வடநாட்டிலுள்ளவர்கள் அங்குள்ள திருக்கோயில் களில் தாமே திருவுருவங்களைத் தொட்டு வழிபாடு ஆற்றுதலை நேரே பார்க்கலாம்.

ஒரு கற்றாவின்பாலைப் பெற வேண்டுவார், அதன் கன்றை அதன்பால் உய்த்து, அஃது உண்ண உண்ணப் பால் சுரந்து ஒழுகாநிற்புழி, அதனைப் பின்னர்த் தாம் கறந்து கைக்கொள்ளு மாப்போல், மெய்யடியார் சென்று வழிபட்ட திருக்கோயில் களில் உள்ள திருவுருவங்களிலே அவர் பொருட்டுத் தோன்றி நின்று பேரருள் செய்த இறைவன் திருவருளை அவ்வுருவங் களின் வழி நாம் பெறுதலே எளிதிற் கைகூடுவதாகும். ஆகவே, கல் மண் முதலான பருப்பொருள் அடையாளங்களில் றைவனை விளங்கச் செய்தற் பொருட்டுச் செய்யும் ஏனை எல்லா முறை களையும்விட, அவன்றன் மெய்யடியார் அவ்வத் திருக் கோவிலின் மேற் பாடிய தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைத் திருப்பதிகங்களை அன்பினால் எடுத்தோதி அகங்கரைதலே கழிபெருஞ் சிறப்புடைத்தா மென்க.

6

சிவபிரான் திருக்கோயில்களில் நிறுத்தப்பட்டிருக்கும் சிவலிங்க வடிவானது ஒளிவடிவாய் விளங்கும் இறைவனது நிலையை உணர்த்துவதாகும். இவ்வடிவு எல்லாச் சமயத் தாராலும் வழுத்தி வழிபடுதற்குரிய பொதுவான அடையாள மாய் உலகம் எங்கும் உள்ளதாகும். எந்தச் சமயத்தாரேனும் எந்தச் சாதியாரேனும் இதனை வணங்குவதற்கு விரும்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/305&oldid=1577789" இலிருந்து மீள்விக்கப்பட்டது