உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

273

வழிபாடு வாயிலாகவே எமதுணர்வை இழுத்துச் சென்று றைவன் மாட்டுப் பதிய வைக்குங் கருவியா மென்பதூஉம், ங்ஙனம் போந்த அருட்கோலத்தை அறிதற்குரிய நல்வினை முகிழ்ப்பு இல்லாத ஏனைநாட்டவர் தத்தமக் கறிவு சென்றவாறெல்லாங் கல்லானுஞ் செம்பானும் இயற்றி

வைத்துக்

காண்டு வழிபடும் அவரது வழிபாடு அவ்வுருவத்தின்கண்மேற் கடந்து சென்று இறைவன் உண்மை அருட்கோலத்தின்கண் அவரறிவைப் பதிக்க மாட்டாமையின் அவர் செய்யும் அவ் வழிபாடு உருவ வழிபாடு யென்று வழங்கப்பட்டா ா மென்பதூஉம், இங்ஙனம் வேறுபாடு பெரிதுடைய திருவுருவ வழிபாட்டிற்கும் உருவ உருவ வழி பாட்டிற்கும் இலக்கண முணராது அவை யிரண்டனையும் ஒன்றெனக் கொண்டு அவ்வாற்றான் நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாட்டு நன் முறையை ஒரு சாரார் இகழுதல் பொருந்தாதா மென்பதூஉமேயாமென் றுணர்ந்து கொள்க.

இறைவன் திருவருளாணை கடவாத மெய்யன்பரான நம் முது தமிழ்ச் சான்றோரின் வழித் தோன்றிய தமிழ் மக்காள்! விழித்தெழுமின்கள்! இதுகாறும் ஆரிய மாயத்திற் சிக்குண்டு அறிவு மயங்கித் தூங்கிய பெருந் தூக்கத்தினின்றும் விழித்தெழு மின்கள்! இனி ஆரிய மொழியையும் ஆரிய வேதங்களையும் நம் திருக்கோயில்கள் ஓதுதலை அறவே யொழித்துத் தேவார திருவாசக நாலாயிரப் பாடல்களையே ஓதி, அவற்றிலுள்ள மந்திரங்களாலேயே அம்மையப்பருக்கு எல்லா வழிபாடுகளும் ஆற்றி, இறைவன் திருஅருளால் இம்மை மறுமைப் பயன்களை ஒருங்கெய்துவீர்களாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/304&oldid=1577788" இலிருந்து மீள்விக்கப்பட்டது