உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் 6

இப்போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்களிற் பெரும் பாலார் எல்லாம் வல்ல ஒரு தெய்வத்தை வணங்காமல், இறந்து போன மக்களின் ஆவிகளையும், பல பேய்களையும் இவை போன்ற வேறு சில சிறு தெய்வங்களையும், வணங்கி, அவற்றுக்காகப் பல கோடிக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் வெட்டிப் பலியிடுகின்றார்கள். இக்கொடிய சயலை அவர்கள் அறவே விடுமாறு செய்து, சிவம் அல்லது திருமால் என்னும் ஒரு தெய்வத்தையே வணங்கும்படிச் செய்தல் வேண்டும்.

பண்டைக் காலந் தொட்டே பரம்பொருளை அம்மை யப்பராகப் போற்றி வரும் வழக்கம் தமிழ்நாட்டின்கண் இருந்து வந்துளது. இவ்வழக்கம் எகிப்து, பாபிலோனியா, எருசலேம் முதலிய நாடுகளிலும் பண்டைக் காலத்திலிருந்தமை ஒப்பு நோக்கி மகிழ்தற்குரியதாம். கத்தோலிக்கர்களின் கருத்தும் இக்கருத்தை ஒத்திருப்பதும் நோக்கற்குரியதாகும். கடவுள் மகனைத் தன் வடிவிலேயே படைத்தார் என்பது விவிலிய நூற் கருத்து. கடவுளை ஆண் தத்துவத்தில் அப்பனாகவும் பெண் தத்துவத்தில் அம்மையாகவும் ‘பரம பிதா' என்றும் ‘பரிசுத்த ஆவி' என்றும் இன்றும் கிறித்தவர்கள் வணங்கி வருவது யாவருமறிந்ததே. இருக்கு வேதத்திலும் ஆண் வடிவமாகிய உருத்திரனுக்குப் பக்கத்தில் அம்மை வடிவமிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உலகமே ஆண் பெண் வடிவு கொண்ட தாகும். ஓரறிவு முதல் ஆறறிவீறாகவுள்ள எல்லா உயிர்களின் மாட்டும் காணப்படும் இவ்விருவகைத் தோற்றத்திற்கு மூலம் றைவனதுள்ளமே. ஆகவே, இவ்விருமைப் பண்பு தோற்றும் குறியீடாகிய உடம்பை இ இம்மண்ணிடைத் தமக்களித்த பெற்றோர்களுக்கு நன்றி கூறுவான் கருதியே ஆசிரியர் ‘ஆதி பகவன்' என்ற சொற்களை முதற்கண் அமைத்தார்.

நாவலந் தீவினராகிய நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாடு இறைவன் ஒரோவொரு காலத்து ரோரன்பர்க்கு அருள்புரிதற் பொருட்டு அருளையே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளி வந்த திருக்கோலக் குறிப்பு இனிது விளங்க அமைத்து நிறுத்திய வழிபாடாய், அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/303&oldid=1577787" இலிருந்து மீள்விக்கப்பட்டது