உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

271

இல்லாத் தனிப் பெருஞ் சிறப்பினை அவர்கட்கே தந்து, மற்றைச் சமயங்களுக் கெல்லாம் மேலான தனி நிலையில் வைகி விளங்குவது.

மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலான நம் சமயாசிரியர்கள் பௌத்த சமண மதங்களில் இருந்து சைவ சமயம் தழுவ விரும்பினாரை அங்ஙனம் சைவ சமயத்திற் சேர்த்து அதனைப் பரவச் செய்திருக்கின்றார்களாதலால், நம் ஆசிரியர் காட்டிய அந் நன்முறையைக் கடைப்பிடித்து நாமும் அயற் சமயத்திலிருந்து வருவாரை நம்முடன் சேர்த்துக் கொண்டு எவ்வகை வேறுபாடுமின்றி அளவளாவுதல் வேண்டும்.

இந்து சமயத்தின் கோட்பாடுகள் யாவையோவெனில், காணப்பட்ட இவ்வுலகினுக்குக் காணப்படாத முழு முதற் கடவுள் முதலாய் உள்ளதென்பதும், அஃது அருவமாயும் உருவமாயும் இவையல்லவாயும் இருக்கு மென்பதும், அஃது என்றும் உளதாய் அறிவாய் இன்பமாய் இருப்பதாகலிற் சச்சிதானந்தம்' எனப்படும் என்பதும், அஃது அருவமாய் வழுத்தப் படுதலே யன்றியும் எல்லார்க்கும் வணங்குதற்கு எளிதான உருவத்திரு மேனியுடன் திருவுருவின்கண்ணும் ன் வைத்து வழிபடப்படு மென்பதும், அதனை அறிந்து வழிபடுதற்குரிய உயிர்கள் அறிவுடன் என்றுமுள்ள பொருள் களாய் எண்ணிறந்தனவாய் இருக்கு மென்பதும், இவ்வுயிர்கள் தொன்று தொட்டே அறியாமை வயப்பட்டிருக்கின்றன வாகலின் இவைகள் அவ்விறைவனை வழிபடுமாற்றால் தூய்மை எய்தி அவனோடு ஒற்றுமைப்பட்டு இன்ப நுகரு மென்பதும், இவைகள் அறிவு முதிரமுதிர ஒரு பிறப்பைவிட்டு மற்றொரு பிறவியிற் செல்லு மென்பதும், இங்ஙனம் இவற்றிற்குரிய முற் பிறவியிற் செய்தவினை பிற்பிறவியில் வந்து அவைகளால் நுகரப்படுமென்பதும், இவ்வுயிர்களுக்கு உடம்பாயும் கருவிகளாயும்

ங்களாயும் நுகர்பொருளாயுமிருந்து பயன்படுகின்ற அறிவில்லாத சடப்பொருள் என்றும் உளதாமென்பதும், இதற்குரிய கோட்பாடுகளாம். கோட்பாடுகளனைத்தும் இவ்விந்திய நாடெங்கும் தழுவப்பட்டு

வருகின்றன.

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/302&oldid=1577786" இலிருந்து மீள்விக்கப்பட்டது