276
மறைமலையம் 6
“குறி களும்அடை யாளமுங் கோயிலும், நெறிக ளும்அவன் நின்றதோர் நேர்மையும், அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும், பொறியிலீர்மனம் என்கொல் புகாததே”
என்று அருளிச் செய்தா ரென்பது.
ஒவ்வொரு கோயிலின் சார்பாக நடத்தப்பட்டு வரும் திருவிழாக்கள் எப்போதும் போலவே எங்கும் நடைபெறும்படி செய்தல் வேண்டும். ஏனென்றால், நாடோறும் நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபடும் ஏழை மக்களும், செல்வ மிகுதியாற் கடவுளை மறந்து சிற்றின்பத்திற் கிடந்துழலும் சல்வர்களும், இவ்விருவர் நிலையினும் சிறிது சிறிது ஒட்டி நிற்கும் மற்றைப் இத்திருவிழாக்
பாது மக்களும்
சண்டைக்கு
L மான
காலங்களிலேதாம் தத்தம் முயற்சிகளினின்றும் ஓய்வுபெற்று நீராடி நல்ல ஆடை அணிகலன்கள் அணிந்து, தம் மனைவி மக்கள் சுற்றத்தாருடன் மன மகிழ்ந்து கடவுள் நினைவும் வணக்கமும் உடையராய்ப் பல ஊர்க் காட்சிகளையும் பல மக்களின் தோற்றங்களையும் கண்டு இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று இன்புறுகின்றனர். இத் திருவிழாக்களும் திருக்கோயில்களும் இல்லையானால் இந்நாடும் ஏனை அயல் நாடுகளைப் போல் ஓயாத போர்க்களமாகவே இருக்கும். ஆதலால், திருவிழாக் களை ன்னும் செவ்வையான முறையில் நடைபெறச் செய்வதோடு, அத்திருவிழாக்களின் உண்மையும் பயனும் எல்லார்க்கும் எடுத்துச் சொல்லும்படி கல்வியிற் றேர்ந்த அறிஞர்களுக்குத் தக்க பொருளுதவி செய்து, அவர்கள் அத்திருவிழாக் காலங்களில் ஆங்காங்கு விரிவுரை செய்யும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும்.