உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

93

வயதுக்கும் மேற்பட்ட அறிவாளியாயிருக்கிறாய். என் டாமிக்கு நீ தோழனாயமைந்தது எங்கள் நற்பேறு. நீயே அவன் பள்ளித் தோழனாகவும் அமைந்தால் இன்னும் நன்றாயிருக்குமென்று கருதுகிறேன். உனக்குக் கற்பிக்கும் ஆசிரியர் யார்? உன் பள்ளி எது?” என்றார்.

க்

சிறுவன் “இவ்வூரில் பள்ளி எதுவுங்கிடையாது. நான் வ்வூர் ஓதுவாராகிய திரு. பார்லோவிடம் கற்றுக் கொள்கிறேன். உங்கள் பாராட்டை நான் பெறுவது உங்கள் அன்பு காரணமாகவும் ஓரளவு அவர் சீரிய படிப்பினைகள் காரணமாகவுமே; டாமியும் அவரிடம் படித்து என் படிப்புத் தோழனாகக் கூடுமானால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி யடைவேன்” என்றான்.

குடியானவருக்குக் கற்றுக்கொடுக்கும் ஒரு ஆசிரியரிடம் பிள்ளையை விடுவதில் திருவாட்டி மெர்ட்டனுக்கு முதலில் மனமில்லாதிருந்தது. ஆனால் குடியானவச் சிறுவனையே தங்கள் வீட்டில் வந்து பெருமையடையச் செய்த ஆசிரியர் தன் பிள்ளைக்கு இன்னும் உயர்வு கொடுக்கக் கூடும் என்ற எண்ணம் அவளுக்கு மெல்ல எழுந்தது. ஆகவே அவளும் திரு. மெர்ட்டன் விருப்பத்துக்கு இசைந்தாள்.

குடியானவச் சிறுவனுக்கு இவ் எதிர்பாரா உயர்குடித் தொடர்பை உண்டு பண்ணக் காரணமாயிருந்தது இச்சந்திப்புக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்ச்சியும் அதில் அச்சிறுவன் காட்டிய தீரமுமேயாகும். அந்நிகழ்ச்சியை அடுத்த பிரிவில் கூறுவோம்.

அடிக்குறிப்பு

1. ஜில்லா போன்ற ஒரு பிரிவு.