உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. கதை வாசிப்பு-

செல்வனும் கூடை முடைபவனும்

நூலகத்தில் சென்றவுடன் ஆசிரியர் மாணவரிருவரையும் வீற்றிருக்கச் செய்தபின் தன்னிடமிருந்த ஒரு கதைச் சுவடியை டாமியினிடம் கொடுத்து “இதிலிருந்து ஒரு கதை வாசி. இருவரும் கேட்டு இன்புறுகிறோம்” என்றார்.

டாமி “எனக்கு எழுத வாசிக்க வராது” என்றான்.

ஆசிரியர் "அப்படியானால், நீ வாங்கி வாசி, ஹாரி"

என்றார்.

ஹாரி சுவடியை வாங்கி வாசித்தான். இருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் படித்த கதை ‘செல்வனும் கூடை முடைபவனும்' என்பது அது வருமாறு:

ஒரு ஊரில் ஒரு பெருஞ் செல்வன் இருந்தான். அவனுக்குப் பெரிய மாடமாளிகையும் அளவற்ற நிலபுலச் செல்வமும் உண்டு. அவன் இன்ப வாழ்விலும் குடியிலும் மயங்கிக் கிடந்தான். குடியானவர்களைக் கொடுமைப்படுத்திப் பொருள் பறித்தும் வந்தான். அவன் சோம்பல் வாழ்வாலும் மட்டற்ற இன்பத்தாலும் அவன் எப்போதும் நோய்வாய்ப்பட்ட வனாயிருந்தான். அத்துடன் அவன் கொடுமைக்குட்பட்ட மக்கள் வெறுப்பாலும் கிளர்ச்சிகளாலும் அவன் ஓயாது தொல்லைப்பட்டுச் சுடு மூஞ்சித்தன முடையவனாகவும் இருந்தான்.

அவன் மாளிகையை யடுத்த வெளியிடத்தில் சூரல் புதரருகில் சிறு மூங்கிற் குடிசையில் ஓர் ஏழை முதுமகன் வாழ்ந்து வந்தான். அவன் குடும்பமேயில்லாமல் தனியாய் வாழ்ந்த போதிலும், சூரல் வார்ந்து கூடை முடைந்து வரும் வருவாயில்