உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

||.

அப்பாத்துரையம் - 28

அதனிலும் இழிவல்லவா?" என்றார். டாமி உணவைத் தொடவில்லை. முன்னிலும் மிகுதியாக அழுதான்.

'நான் கொடுத்த உணவை நான் மீண்டும் உண்ண விரும்பவில்லை' என்று ஹாரி எழுந்து விட்டான்.

என் மாணவன் உண்ணாமல் நானும் உண்ண விரும்ப வில்லை' என்று ஆசிரியர் எழுந்து விட்டார்.

ஆசிரியரும் ஹாரியும் தன்னிடம் கொடுமையுடையவர் அல்லர் என்பதை டாமி ஒரு நொடியில் உணர்ந்து கொண் டான். தனக்காக அவ்விருவரும் உணவு மறுத்துவிட்டனர் என்பதையும் உணர்ந்தான். ஆசிரியர் வீட்டில் ஒரு ஒழுங்கு முறை உண்டென்றும் அதன்படி தான் குற்றம் செய்ததற்காக அனைவரும் பட்டினி கிடக்கின்றனர் என்றும் அவனுக்குத் தெளிவாயிற்று. அவன் ஆசிரியரிடம் பணிந்து “இன்றைய குற்றம் முழுவதும் என்னுடையது என்னை மன்னித்து இருவரும் உண்ணும்படி கோருகிறேன். நாளை முதல் என் பங்கு வேலையை நான் கட்டாயம் செய்கிறேன்” என்றான்.

ஆசிரியர் மனமுவந்து “அப்படியானால் ஹாரியும் நானும் எங்கள் உணவில் ஒவ்வொரு பங்கு உனக்குத் தருகிறோம். உண்மையில் உன்னைப் பட்டினியிட்டு உண்பதைவிட உன்னுடன் பகிர்ந்துண்பதே எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.

மூவரும் உண்டு மகிழ்ந்தனர். பின் அனைவரும் நூலகம் சென்றனர்.