உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

105

முற்பகல் முழுவதும் ஆசிரியரும் ஹாரியும் நூலகம் சென்று பல சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தனர். டாமியும் உடன் சென்றிருந்தான். அவ்வாசிரியரைவிட்டு வீட்டுக்கே சென்று விடலாமா என்று கூட எண்ணினான். ஆனால் என்றும் தன்னிடம் கடுமையாகப் பேசாத தன் தந்தை வரும்போது "நீ ஆசிரியரிடம் நல்ல பெயர்வாங்கி வந்தால்தான் உன்னை ஐமெய்க்காவிற்கு இட்டுச் செல்ல முடியும். அல்லது உன்னை விட்டுவிட்டு நானும் உன் தாயாரும் மட்டும் சென்றுவிடுவோம்” என்று எச்சரித்தது அவன் நினைவுக்கு வந்தது. ஆகவே உச்சி வேளைவரை எப்படியும் கழித்துவிடுவது என்று

பொறுத்திருந்தான்.

உச்சி வேளையிலும் தனக்கு உணவில்லாமல் மற்ற இருவருமே உண்பது காண அவன் சீற்றம் எல்லை மீறியது "எனக்கு மட்டும் ஏன் உண்ணவில்லை” என்று கேட்டான். று

'நீ செல்வப் பிள்ளை. உயர்குடிப்பிள்ளை. நீ வேலை செய்ய முடியாது. நாங்கள் ஏழைகள். உழைத்து உண்கிறோம். சோம்பேறிகளுக்குக் கொடுக்க எங்களிடம் உணவு ஏது?' என்று ஆசிரியர் அமைதியாக விடையளித்தார்.

டாமிக்கு இப்போது உண்மையிலேயே நிரம்பப் பசி. கோபமும் தாபமும் வேறு அவன் உள்ளத்தைக் கொதிக்க வைத்தது. அவன் கண்கள் அழுதழுது சிவந்திருந்தன. ஹாரிக்கு அவன் துன்பத்தைத் தாங்க முடியவில்லை. ஆசிரியரின் கடுமுறையையும் அவன் முழுதும் உணர்ந்து கொள்ளவில்லை. ஆகவே இரக்கத்துடன் ஆசிரியரை நோக்கி 'ஐய, என் பங்கு உணவை நான் என் மனம் போல் யாருக்கும் கொடுக்கலாம் அல்லவா?” என்று கேட்டான்.

66

“ஆம், உன் பங்கு உணவு உன்னுடையதே. நீ அதை எதுவும் செய்யலாம்' என்றார் அவர்.

'சரி, இன்று நான் என்பங்கு முழுவதையும் பட்டி கிடக்கும் என் தோழன் டாமிக்குக் கொடுக்கிறேன்' என்றான்.

னி

பசியார்வத்துடனும் ஆவலுடனும் டாமி அதைப் பெற்றுக் கொள்ள இருந்தான். அதற்குள் ஆசிரியர் “அப்பனே, உழைப்ப தனாலேயே உயர் குடிமக்களுக்கு இழிவு வந்துவிடும் என்று கூறினாயே உழைப்பவரிடம் உணவை இரந்து உண்பது