உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

|-

அப்பாத்துரையம் - 28

திரு பார்லோவும் ஹாரியும் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தம் பாத்தியை வெட்டிச் செப்பனிட்டுப் பயிர் செய்தனர். டாமி கம்புங் குச்சும் ஒடித்தும் முட்டைக் கட்டிக் கொண்டிருந்தும் அந்நேரத்தை வீண் போக்கினான். வேலை முடிந்ததும் திரு பார்லோ ஹாரியைமட்டும் இட்டுக்கொண்டு தோட்டத்தின் ஒரு கோடியிலிருந்த வேனில் அருந்தகத்திற்குச் சென்றார். தன்னை அவர் அழைக்காவிடினும் டாமி அவர்களைப் பின் தொடர்ந்தான். திரு பார்லோவின் துணையாள் அருந்தகத்தில் மேடையிட்டு இரு நாற்காலிகள் போட்டிருந்தார். இரு தட்டங்களில் இனிய பழவகைகள் வைத்திருந்தன. இரு குவளைகளில் நறுந் தேம்பாலும் மற்றும் இருகுவளைகளில் நறும்புனலும் இருந்தன. டாமியைக் கவனிக்காமலே ஆசிரியர் தாம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஹாரியை மற்றதில் அமரும்படி கூறினார். இருவரும் பேசிக் கொண்டே பழங்களை அருந்தித் தேம்பால் பருகினர். டாமிக்கு நாற்காலியும் இட்டிருக்கவில்லை. அவன் நின்று கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அவனுக்குப் பழங்களும் வைக்கப்பட வில்லை. அவனிடம் யாரும் பேசவோ, உண்ணும்படி அழைக்கவோ செய்யவில்லை.

ரு

டாமியின் வாழ்க்கையில் அவனை வேறு ஒருவர் புறக்கணித்து நடத்தியது இது தான் முதல்தடவை. அவன் கடுஞ் சினங்கொண்டு உறுத்துப் பார்த்தான். பற்களை நெறநெறவென்று கடித்துக் கொண்டான். கைகால்களை நிலத்தில் ஓங்கியறைந்து பார்த்தான். ஆசிரியர் கவனம் அவன் பக்கம் செல்லவேயில்லை. அதன்பின் அவன் வெப்பமும் புழுக்கமும் தாங்காமல் விம்மிவிம்மி அழுதான்.

ஆசிரியர் ‘என்னசெய்தி, டாமி! ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார். டாமி யாதொரு விடையும் சொல்லாமல் மேலும் அழுதான். ஆசிரியர் 'உனக்கு விடைதர மனமில்லாவிட்டால் ஒன்றும் பேச வேண்டாம். இங்கே பேசித் தீரவேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்துவாரில்லை' என்று கூறி எழுந்து சென்றார். ஹாரி சற்றுப் பின்தங்கி டாமியை இரக்கத்துடன் பார்த்து விட்டுத் தானும் போய்விட்டான்.