உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

(139

தாவிச் சென்று அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டான். குதிரையின் ஓட்டமும் தடைபட்டது. பலர் உதவிக்கு வந்து குதிரையால் இழுத்துச் செல்லப்பட்டவனை விடுவித்தனர்.

குதிரைமீது சென்றவன் வேறுயாருமல்ல, சேஸ் பெரு மகனே. குதிரை எதையோ கண்டு கலைந்து மருண்டதினால் அவன் தவறி விழ இருந்தான். ஆனால் அவன் காலின் தார்முள் சேணத்தில் சிக்கிக் கொண்டது.பாதை கடுநிலமாயிருந்திருந்தால் அவன் அவ்விழுப்பில் மாண்டே போயிருக்க வேண்டும். நிலம் சேறும் சக்தியுமாயிருந்ததனால் அவன் ஆடைகள் கெட்டுச் சிறிது காயமடைந்ததுடன் நின்றது. அவன் அடைந்த கிலியும் அவமதிப்பும் அவனை வாட்டின. ஆனால் தன்னைக் காத்தவன் காலையில் தன் கொடுமைக்கு ஆளான சிறுவனேயென்று கண்டதும் அவன் பின்னும் வெட்கமுற்றான். ஆயினும் அதை வெளிக்குக் காட்டாமல் அவன் தான் செய்தவற்றை மன்னிக்கும் படி கூறிக்கொண்டு தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பொன்னை ஹாரியிடம் கொடுத்தான். ஹாரி அதனை அசட்டையுடன் மறுத்து, "நான் பிறருக்கு உதவுவது அவர்கள் பணத்தை எதிர்பார்த்தல்ல. அவர்கள் மனிதர்கள்; மனிதர் துன்பங் கண்டால் உதவுவது மனிதர் கடமை என்பதற்காகவே” என்றான்.

செல்வன் இம் மறுமொழியை எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அவனுக்குக் கிடைத்த அவமதிப்பால் அவன் வேறு எதுவும் கூறமுடியாமல் தன் குதிரையேறிச் சென்றான்.

ஹாரியும் டாமியும் சிறுவன் வீடு சென்ற போது சிறுவன் அவர்களை வரவேற்றான். திருபார்லோ ஓதுவாராகவும் ஆசிரியராகவும் இருந்ததுடன் குடும்ப மருத்துவ உதவிக்கு வேண்டிய பயிற்சியும் உடையவராயிருந்தார். அவர் சிறுவன் தந்தைக்கு மருந்தும் அவர்கள் குடும்பத்துக்கு வேண்டிய உணவு வசதியும் இதற்குள் அனுப்பியிருந்ததனால் அவர்கள் ஏற்கெனவே மகிழ்ச்சியுடனிருந்தனர். டாமி சிறுவனுக்கும் அவன் உடன் பிறந்தார்களுக்கும் எடுத்துச் சென்றிருந்த ஆடைகளை வழங்கிய போது அனைவரும் டாமியைப் பாராட்டினர். தம் குடும்ப நலன்களுக்கு அவனே பெரிதும் காரணம் எனக் கொண்டாடினர். டாமி ஹாரியிடம் 'என் பணம் இது காறும் இவ்வளவு நல்ல பயனை என்றும் தந்ததில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

L