உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

145

கொண்டிருந்த தையற்காரன் மீது அச்சேற்று நீரை இறைத்து வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

அதனால், யானை சிறு தீமைகட்கும் நெடுநாள் கறுவம் வைத்துக் கொண்டிருந்து பழிவாங்கும் இயல்புடையது என்பதனைத் தையற்காரன் உணர்ந்தான்.

"யானை பழிவாங்குமியல்புடையது மட்டுமல்ல; ஓரளவு பொறுமையும் உடையதென்றே கூற வேண்டும். ஏனெனில் எவ்வளவோ பாரிய வல்லமையுடைய அவ்விலங்கு தீமை செய்யாதவிடத்தில் அடங்கியும், தீமை அளவிலேயே தீமை செய்தும் தன் மட்டு மீறாமலிருக்கிறது என்று கூறலாம். அது பட்டாடைகளை நனைத்ததேயன்றி வேறு ஊறு செய்யக் கருதவில்லை. மேலும் பாகன் தண்டனைகளுக்கும் அது பொதுவாகக் கறுவம் வைப்பதில்லை. கறுவம் கொள்ளும்போது கடம்பிடிக்கும் போதும் அது, அவன் ஆற்றலுக்கு மேற்பட்ட தன் ஆற்றலைக் காட்டுகிறது” என்றான் ஹாரி.

ஆசிரியர் "உன் உய்த்துணர்வு சரியானதே. அவ்விலங்கு உருவில் மட்டுமல்ல பெரிது, சில வகையில் தன்மையிலும் அப்படியே” என்றார்.