உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் - 29

சிக்கல் பாதையிலன்று, உள்ளத்திலேயே!

இடர்கள் எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், கடக்கக் கூடாதன அல்ல கடக்கக்கூடாத இடர் என்று எதுவும் உண்மை யில் ஆழ்ந்த கடுஞ் சிக்கல்களானாலும் விடுவிக்க முடியாதன அல்ல. விடுவிக்க முடியாத சிக்கல் என்று எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் எல்லாச் சிக்கல்களும் இடர்களும் மனிதன் செயல்களே. மனிதன் தன் அறியாமையால் தானே ஏற்படுத்திக்கொண்ட இச்சிக்கல்களையும் இடர்களையும் மனிதனே முயன்றால் அறிவின் துணை கொண்டு கட்டாயம் விடுவிக்க முடியும், அகற்ற முடியும். அதற்குரிய சிந்தனையாற்றல் கீழின விலங்குகளுக்கு இல்லாமலிருக்கலாம், அவனுக்குக் கட்டாயம் உண்டு. அவனுக்கு அணிமையான உயர் விலங்கு களுக்குக்கூட ஓரளவு உண்டு.

பாதையிலிருந்து தவறிச் சென்று ஒருவன் எத்தகைய சேற்றுக் குட்டையில், முட்காட்டில் சிக்கினாலும், வந்திருப்பது சேற்றுக் குட்டைக்கு, முட்காட்டுக்கு என்று தெரிந்துகொண் டால், நேர்பாதைக்கு வர ஒரு வழி உண்டு. அது குட்டைக்கு, முட்காட்டுக்கு வந்தவழியே திரும்பி வந்து, பின் வேறு திசையில் நேர்வழி தேடுவதுதான். அதுபோல எத்தனை சிக்கலில், இடரில் மனிதன் விழுந்தாலும், மீள வழியுண்டு. தானே வந்து மாட்டிக் கொண்ட சிக்கலை மீண்டும் தானே விடுவித்துப் பின்பு சிக்கலற்ற நேர்வழியை அவன் எளிதில் காணக்கூடும். உண்மையில் சிக்கலை அல்லது சிக்கலின் திசையை அல்லது பண்பைத் தேடியன்றி அவன் அதில் சிக்கியிருக்க முடியாது.

தவிர, சிக்கலான பாதையை அவன் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் நேர்பாதை யறிவதில் அவனுக்குச் சிக்கல் ஏற்பட்டது என்பதல்ல. நேர்பாதை எப்போதும் சிக்கலற்ற பாதையேயாகும். அதைக் கண்டுணர்வதும் எளிது. ஆனால் அவன் சிக்கலை நாடியதற்குக் காரணம் பாதையின் சிக்கல் தன்மையன்று, அவன் உள்ளத்தின் சிக்கல் தன்மையே யாகும். சிக்கல் தவிர்க்கும் வழி இவ்வுள்ளத்தின் சிக்கல் அகற்றிவிடுவதே. நேர்வழி இதன்பின் அவனுக்கு இயல்பாகத் தோற்றமளித்துவிடும்.

இன்பத்துக்குச் செல்லும் நேர்வழி ஆன்றோர் சென்ற வழி, அறிவொளி நிறைந்தது. அது வளைந்து வளைந்து செல்வதல்ல,