உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

63

பயன்படாதவையேயாகும். நடவாத செய்தியை நினைத்துக் கவலைப்படுவது, பயனற்றது மட்டுமல்ல; வீணாக அமைதி யையும் இன்னலத்தையும் கெடுப்பது ஆகும்.

‘ஏலாத காரியம் ஏலாமலே இருந்துவிடட்டும். நடவாதது நடவாமலே போகட்டும். நடந்து தீர வேண்டியதானால் நடக் கட்டும்' என்று இருப்பதே அறிவுடைமையாகும். 'விதி' நம்பிக்கை ஒரு நன்னம்பிக்கையாய் அமைவது இவ்வகையி லேயே.

36

'அரைத் தெய்வ மாகும்

தெய்விக ஆற்றல்கள் போயின், அவை போகட்டும்!

அதன்மீது வருவது தெய்வமே, அது வரட்டும்!’

குடும்ப வாழ்வில், சமுதாயத்தில், பொருளியல் வாழ்வில் இடர்கள் நேர்வது அறியாமையாலேயே. ஆனால் அவ் விடர்களே அறியாமை அகற்றி இன்னும் அரிய முதிர் அறிவுக்கு வழி வகுக்கின்றன. பொதுத்திற வாழ்வின் நிலை இதுவானால், சமயத்துறை, உயர் ஆன்மிகத் துறையின் நிலை இதற்கு வேறு பட்டதாய் இருக்க முடியாது. ஒவ்வொரு சமயத்துறைக் குழப்பமும் இதயமீது துயர்ப்படலங்களைப் படியவைக்கும் இன்னல்கள் - இன்னும் உயர் அறிவுத் தளத்துக்குக் கொண்டு செல்லும் ஆன்மிகப் படிக்குரிய திருத்தங்கள் - அத்தகு திருத் தங்களுக்கான அறிகுறிகளேயன்றி வேறல்ல! அவ்விடர்கள் எய்தும் வாய்ப்புப் பெற்றவனுக்கு அவை அறிவார்ந்த புதுப் பகலொளிக்கு முன்னீடான விடிவெள்ளியாகக் கொள்ளத் தக்கனவேயாகும்.

புதுப்பிறப்புத் துன்பம்: வாய்மையின் வாயிற்படி

சிற்றிடர், சிறுசிக்கல்கள் கடந்த ஒரு மனித உள்ளம் என்றேனும் வாழ்க்கையின் உட்பொருள், மறைந்த மெய்ம்மை பற்றிய சிந்தனையால் புதிய பெரியதொரு சிக்கலில், சுழலில்பட்டு மறுகுமானால், தற்காலிகமாக அம்மனித உள்ளம் அடைவது அருந்துயரேயானாலும், அத்துயர் புதியதொரு மறுபிறப்புக்