உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

2

4. சுமை நீக்கம்

என்மனம் வாழ்க்கை எனக்கொள்வ திதுவே: வாழ்வொரு சுமைஎனில் இன்சுமை யாகுக! விடாப்பிடி யாமெனில் வீணைநா தத்தின் விடாப்பிடி யாகிய பல்லவி யாகுக!'

ஆர்க்கும் போர்க்களம் அதிரும் வெற்றியைப் பார்க்கொரு புகழாய்ப் பாடுதி யோநீ? அம்முறை வெம்முனை வீழ்பவர் வீழ்ச்சியும் செம்முறைப் புகழாய்ப் பாடுவன் யானே!'

பேய்லி

வால்ட் விட்மன்.

உலக வாழ்வின் பெரும்பாரம் பற்றி நாம் அடிக்கடி வாசிக்கிறோம், கேட்கிறோம். ஆனால் அதனினும் முக்கியத்துவம் வாய்ந்த அச்சுமை நீக்கம் பற்றி அறிபவர், கேட்பவர் மிகச் சிலரே! தலைதடுமாற முதுகு வளைந்து வேதனையுறப் பாரத்தைச் சுமக்காமலே, மனிதரிடையே மனிதராகக் கை வீசிச் செல்ல வழி இருக்கும்போது,அதுபற்றி அறியாமல், கேளாமல், மனித இனம் அப்பாரத்தைச் சுமந்து செல்வது பற்றியே அறிவது, கேட்பது ஏன்? அதிலும் சுமைகொண்டு செல்பவர் சுமையை ஓரிடத்தி லிருந்து அதற்குரிய நேரிடம்வரை கொண்டுசென்று பின்

ளைப்பாறுவதல்லது, எப்போதும் கொண்டு செல்வரா? செல்ல இணங்குவரா? வாழ்க்கைப் பயணம் செய்பவர் மட்டும் அப்படி ஏன் ஓய்வொழிவில்லாமல் சுமையைத் தாங்கியவாறு ஓயாப் பயணம் செய்ய வேண்டும்?

அப்பாவிப் பிரயாணி

அப்பாவிப் பிரயாணியே! சுமைநீக்க வழியிருக்கும்போது அதையறியாமல் சுமந்து, ஓயாது சுமந்து செல்கிறாயே