உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அப்பாத்துரையம் - 29

செல்வர். அதுபோலவேதான் ஆன்மீக அக உலகிலும், வாழ்வில் சுவையற்ற பயனற்ற சுமைகளை யாரும் சுமந்து கொண்டு செல்ல விரும்பமாட்டார்கள். இன்றியமையாப் பயனும் தேவையும் கருதியே எவரும் எப்பொருளையும் சுமக்க எண்ணுவர். சுமக்காது கொண்டு செல்லும் கருவி கிடைத்தால் அவ்வாறு சுமந்து கொண்டு செல்வதையும் கட்டாயம் தவிர்ப்பர். மொத்தத்தில் எப்படிக் கொண்டு சென்றாலும் இன்பத்துக்குரிய சுமையைத் தான் சுமையாக்க இணங்குவரேயன்றித் துன்பத்துக்குரிய எதனையும் அவ்வாறு கொள்ள எவரும் இணங்க மாட்டார்கள்.

அடயோகிகள், வைராகிகள் போன்ற கடுந்துறவிகள் தம் உடலைத் தாமே பலவகையில் ஒறுத்துத் துன்புறுத்திக் கொள்வ துண்டு. இதுவே தேவையற்றது, வீணானது என்று கூறுவர் பலர். ஆனால் வாழ்க்கையைத் தமக்குச் சுமையாக்கி அதனால் தம் உள்ளத்தின்மீது தாமே சுமத்தும் வேதனைகள் இவற்றைவிட எந்த வகையில் குறைந்தவை? துன்பத்தில் அவை குறைந்தவை யல்ல, பயனில் கூடியவையுமல்ல.

வாழ்வு சுமை, கடும்பாரம் என்று கருதுபவர்கள் அதை இன்பமென்று கொள்கின்றனரென்றோ, தள்ளி விட்டுச் செல்ல விரும்பவில்லையென்றோ கூறமுடியாது. அதன் சுமை பற்றி அவர்கள் அழாத குறையாக அழுகின்றனர். ஆனால் அழுதும் அவர்கள் அதைக் கீழே போட்டுச் செல்ல எண்ணவில்லை. அவ்வாறு செய்ய அவர்கள் விரும்பாதவர்கள் அல்லர். ஆனால் அது வீழ்த்தத்தக்க சுமையன்று, விரும்பியோ விரும்பாமலோ தூக்கிச் சுமந்துதானாக வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பது தெளிவு. அதை இடையே சிறிது நேரம் இறக்கி வைக்கக் கூட முடியாது, அஃது உடலுடன் உடலாக, உயிருடன் உயிராக ஒட்டிக் கொண்டிருப்பது என்றே அவர்கள் கருதுகிறார்கள்

என்னலாம்.

வேண்டியதை, இன்பத்துக்குரியதை, பயனுடையதைத்தான் எவரும் சுமப்பார்கள். பயனற்றதென்றால் அது சுமத்தற்குரியது, சுமை என்று எவரும் கருதமாட்டார்கள். தூர எறிந்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் வாழ்க்கை சுமை என்று கருதுகிறவர்கள் நிலை இங்கே விசித்திரமானது. அவர்கள் அதைத் துன்பம், தீராத் துன்பமென்கின்றனர்; அதே சமயம் சுமை என்று கருதுகின்றனர்,