உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

133

ஒதுக்கிவைத்து, அவர்களை அவர்கள் நிலையில் உள்ளபடி அறிந்தாக வேண்டும். அவர்கள் புற இயல்பு உணர்ந்தால் போதாது. அகஇயல்பைத் துருவிக் காண்டல் வேண்டும். இஃது அவர்களுடன் ஒன்றுபட்டு, ஓரளவு 'அவர்க’ளானாலன்றி முடியாது.

அவர்கள் கண்கொண்டு அவர்களையும், அவர்கள் கண் கொண்டு உலகையும் அறிவதே அவர்களை உண்மையில் அறிவதாக அமைய முடியும். அதேசமயம் இன்னொருவர் வாழ்வை இவ்வளவு துருவி ஆராய்பவர் ஆராய்ச்சிக்கு உட்பட்ட வரைவிட அனுபவத்திலும் அறிவிலும் மிக்கவராயிருத்தலும் இன்றியமையாததாகும். அகநோக்கு ஒன்றே இத்தகைய மேம்பட்ட அனுபவத்தையும் அறிவையும் ஒருவருக்கு ஒருங்கே அளிக்க முடியும்.

ஒத்துணர்வு நோக்கு அகநோக்கே!

ஒத்துணர்பவர் அகநோக்குடையவராயிருந்தால் ஒத் துணர்வுக்குரியவர் அவரைவிட அனுபவத்திலும் அறிவிலும் மேம்பட்டவராயிருந்தால்கூட ஒத்துணர்வுக்குக் கேடு வராது. ஏனென்றால் அகநோக்குடையவரினும் மேம்பட்ட அனுபவமும் அறிவும் உடையவர் கட்டாயம் அகநோக்குடையவராகவே இருக்க முடியும். இருவரும் அகநோக்குடையவரானால் அவர்களிடையே ஒத்துணர்வு வகையில் உயர்வு தாழ்வு இருக்க முடியாது. இருவரும் ஒருவருடன் ஒருவர் ஒத்துணர்வுடையவ ராகவே எளிதில் அமைவர்.

பிறரிடம் ஒருவர் ஒத்துணர்வு காட்டுவதற்குரிய தகுதி தன்மறுப்பும் பொதுநல அவாவும் அகநோக்கும் ஆகும் என்பதை இச்செய்திகள் தெளிவுபடுத்துகின்றன. இவற்றில் எது குறைந் தாலும் ஒத்துணர்வு செயலாற்ற முடியாது.

பிறரிடம் ஒத்துணர்வு காட்டும் வகையில் தப்பெண்ணங் களும் வன்மமும் தீராத் தடைகள் ஆகும். ஆனால் தற் பெருமையும் செருக்கும் அவ்வுணர்வு தோற்றுவதற்கே இடம் தராதவை. மேலும் நீ வெறுக்கும் ஒருவனிடம் உன்னால் ஒத்துணர்வு காட்டல் இயலாது. உனக்குப் பிடிக்காத மனிதனை நீ அறிய முயல்வதும் அரிது. கீழ்த்தர இன்பங் காரணமாக நீ