உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. ஒத்துணர்வு

'இனிமை ஏந்துக ஏனைய உயிர்களி னிடமே; கடுமை காட்டுக தன்னுளே, தன்னுயிரிடமே; கனிவிலாச் சிறு மாந்தரின், சிறுகடுஞ் சொற்கள் இனிதின் ஏற்க! வன்மருநிலக் களைகளே யெனினும், மடுப்பர் இன்னுரமெனப் பயிர்க் கறிவுடை உழவோர்!

2‘புண்பட்டவர் புன்கண் உசாவலேன் புண்பட்டவன் ஆயினன் யானுமே!'

- எல்லா வீலர் வில்காக்ஸ்

வால்ட் விட்மன்

நம்மை நாம் வெல்லும் அளவிலேயே பிறருடன் நாம் ஒத்துணர்வு கொள்ள முடியும். நம்மீது நாமே இரக்கம் கொள்ளும் வேளையில், நாம் பிறருக்காகச் சிந்தித்துப் பிறருக்காகப் பரிந்துணர முடியாது. நம் பெருமை, தலைமை பற்றிய கவலையோ, நம்மைப் பேணிக் காக்கும் கருத்தோ நம்மிடம் இருக்கும்வரை, நாம் பிறரிடம் கனிவாக, நேசமாகப் பரிமாறுவது எளிதன்று. நம் கருத்துக்களை, நம் இன்பங்களை நாம் வலியுறுத்தும்வரை, பிறர் கருத்துக்களில் ஒத்துணர்வு காட்ட வோ, பிறர் இன்பம் பற்றிக் கரிசனை காட்டவோ இயலாது.

ஒத்துணர்வு என்பது பிறர்பற்றிய கருத்துமட்டுமன்று, அது தன்னைப்பற்றிய மறப்பும் ஆகும். தன்மறுப்பு மட்டுமன்று, தன் மறப்பும் அதற்குத் தேவை.

பிறரை ஒத்துணர்ந்து பார்க்க வேண்டுமானால் நாம் அவர்களை முதலில் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இதுவே ஒத்துணர்வின் முதற்படி. ஆனால் இந்த முதற்படி அடைவதற்கு, பிறரை நன்கு உணர்வதற்கே, நாம் அவர்களைப் பற்றிய அளவிலேனும் நம் தன்முனைப்பான தற்கருத்துக்களை