136
அப்பாத்துரையம் - 29
வாழ்க்கையில் பழிகாரன் நிலையும் ஞானி நிலையும், நன்மை தீமையும் இவைபோன்ற தோற்ற மாறுபாடுகளே. பழிகாரன் அனுபவமற்ற குழந்தை, ஞானி அறிவார்ந்த தந்தை
பழிகாரன் என்பவன் உணர்வு முதிர்ச்சி பெறாதவன். அறியாமை காரணமான அவன் தவறான முறையில் செயல்கள் செய்கிறான். இது பேசத் தெரியாத குழந்தை மழலையாடு வதையும் புலம்புவதையும், எழுத வாசிக்கத் தெரியாத குழந்தை கிறுக்குவதையும் மைக்கோலை மாறிப்பிடித்தெழுதுவதையும், ஏட்டைத் தலைகீழாகப் பிடித்து வாசிப்பதையும் போன்றதே. இதற்கு மாறாக ஞானியோ அறிவு அனுபவமுதிர்ச்சியுடையவன். அவன் சரியான செயல்முறைகள் அறிந்து நடக்கிறான்.
அறியாக் குழந்தையின் அறிவற்ற பெற்றோர் அவ் அறியாக் குழந்தையைத் திட்டுவது போலவும் அடிப்பது போலவும் பழிகாரர் பழிகாரரை வைகின்றனர், எதிர்க்கின்றனர், அவ்வளவே! ஆனால் ஞானி ஞானியையும் கடிவதில்லை, எதிர்ப்பதில்லை. பழிகாரனையும் கண்டிப்பதில்லை, பகைப்ப தில்லை. தானும் ஒரு காலத்தில் அறியாப்பருவத்தில் பழி காரனாயிருந்தது அவனுக்குத் தெரியும். திட்டுதல், வெறுத்தல், எதிர்த்தல், ஒதுக்குதல் அப்பருவத்தின் அறியாமைக்கு உரியது என்பதை அவன் அறிவான்.
இதுமட்டுமன்று. அறியாக் குழந்தைகளிடம் உள்ள முதிரா அறிவின் இளந்துடிப்புக் கண்டு நாம் மகிழ்ந்து கனிவும் பாசமும் காட்டுவதுபோல, ஞானியும் பழிகாரனிடம் வருங்கால ஞான விதை கண்டு கனிவார்வமும் பரிவார்வமும் கொள்வான். அவனிடம் கனிந்த ஒத்துணர்வுகொண்டு, அவனைத் தன் குழந்தையாக, பின்னோனாக, நண்பனாகக் கருதி உரிமையுடன் சலுகைகள் காட்டுவான் அவன் போக்கில் நின்றே அவனை அவனறியாமலே மெல்லத் தூக்கி விட்டு மகிழ்வூட்டி மகிழ்வான். இந்த ஒத்துணர்வே பழிகாரனிடம் ஞானிக்குரிய நேரிய நடை முறை ஆகும்.
முழுநிறை அறிவு முதிர்ச்சி பெற்ற ஞானி எல்லாரிடமும் ஒத்துணர்வு காட்டுவான். அதேசமயம் எவரிடமிருந்தும் அவன்