உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

137

ஒத்துணர்வு எதிர்பார்ப்பதில்லை. உண்மையில் அஃது அவ னுக்குத் தேவைப்படுவதுமில்லை. ஏனெனில் அவன் பழிகள், துன்பங்கள் ஆகிய எல்லாவற்றையும் கடந்துவிட்டவன் ஆகிறான். பேரின்ப வெள்ளத்தில் மிதக்கும் அவன் விருப்பம் ஒன்றே ஒன்றுதான் - ஒத்துணர்வு வேண்டியவர்களுக்கெல்லாம் ஒத்துணர்வுகாட்டி, துன்புற்றவர்களுக்குத் தன்னாலியன்ற மட்டும் ஆறுதலளித்துத் துன்பம் துடைத்து, தான் நுகரும் பேரின்பக்கரைக்கு அவர்களையும் மெல்ல இட்டுக் கொண்டு செல்வதேயாகும்.

பழிகாரர் பழியின் பயனான துன்பம் அடைவது இயல் பானாலும், ஞானி தன் ஒத்துணர்வின் மூலம் அவர்களை மெல்ல உயர்தளங்களுக்கு உயர்த்தி, அத்துன்பங்களினின்று விடுபடும் வழியைக் காட்டி உதவுகிறான்.

கண்டிப்பதில்லை, பரிவு கொள்கிறான்

-

ஒவ்வொரு பழியும் அது செயல் சார்ந்ததானாலும் கருத்துச் சார்ந்ததானாலும் அதற்குரிய துன்பம் தராமல் போவதில்லை. இதை அறிந்த எவனும் பழிகாரனைக் கண்டிப்ப தில்லை. அவனிடம் பரிவே கொள்கிறான், ஒத்துணர்வு கொள்கிறான். தன் உள்ளத்தின் தூய்மை காரணமாக, பழி கண்டவுடனே அதைத் தொடரும் துன்பம் கருதி இரக்கம் கொள்கிறான். இரக்கமும் ஒத்துணர்வும் துன்பமுறுபவனுக்குத் துன்பத்தைத் தாங்கும் உரம் தந்து அதன் படிப்பினைகளைப் பயன்படுத்த வழி வகுக்கிறது.

தன் உணர்ச்சிகளைத் துப்புறத் துடைத்தவனே ஞானி. அவன் தன்னல அவாக்களைப் பொதுநலமாக மாற்றியவன். தன் முனைப்பான உள்ளப் போக்குகளைக் காலடியிலிட்டு துவைத்தவன். இந்நிலையில் அவனால் மனிதனின் பழிகள், துயர்கள், ஆகிய அனைத்தையும் அடிமுதல் முடிவரை அறிய முடிகிறது. செயலையும் செயலின் பின்நின்ற கருத்துக்களையும் அதைத் தூண்டிய நோக்கங்களையும் அவன் ஆய்ந்துணர்கிறான். அவன் உள்ளத்தில் பழிகாரன் உருவும் செயலும் பண்பும் நிழலாடுகின்றன. ஆனால் அவ்வுருவை அவன் தனக்குப் புறம்பான ஒன்றாக, தன் இயல்புக்கு முற்றிலும் அயலான ஒன்றாகக் காணவில்லை. தன் புது வாழ்வின் ஆழத்திலிருந்து