உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

அப்பாத்துரையம் - 29

முடியும். அப்போதும் அது பல்வண்ணங்களுடன் மின்வெட்டுப் போல் வெட்டிக் கவர்ச்சியுடன் அசைந்தாடிக் கொண்டு சீறி வரும் நாகப்பாம்பினைக் காணும்போது ஏற்படும் இன்பம் போன்றதே. அது கணநேரப் போலி இன்பம் தந்து அதற்கு விலையாக மாளாத் துன்பம் உண்டுபண்ணும். பழிக்குப் பழி செய்பவர் படிப்படியாகவே துன்ப வெள்ளத்தில் மேன்மேலும் ஆழந்து தோய்வதனால், அத்துன்பத்தின் முழு அளவை ஒரே மொத்தமாக அறிய முடிவதில்லை. ஆனால் மன்னிப்புப் பண்பின் அறிவாரொளியில் மூழ்கியபின், அவர்கள் பெறும் இன்பத்தின் நிறைவே அத்துன்பத்தின் அளவைக் காட்ட வல்லது. நிறை ஒளியாகிய அந்த இன்பத்துக்கு எதிராக, ஒப்பாக, அது நிறை இருளாய் அமையும்.

பழிக்குப் பழி செய்பவனது பகைமையின் வெறியும் சீற்றமும் சிறிது ஓய்வுறும் நேரத்தில், அவன் நாடி நரம்புகள், உடல் உள உயிர்கள் யாவும் முற்றிலும் தளர்வுற்றுச் சோர்ந்து விடுவது காணலாம். பழிக்குப் பழி தரும் துன்பங்களில் இது ஒரு சிறு பகுதியே. அது வாழ்வில் துன்பமும் விரைவில் மாள்வும் ஒருங்கே அளிக்கிறது. மன்னிப்புப் பண்போ வாழ்வில் அமைதியும் இன்பமும் வளமுடன் தருவது மட்டுமன்று. அது வாழ்வையும் மாளா வாழ்வாக்கி, என்றும் வளர்ந்துகொண்டே செல்லும் ன்பப் பொங்கல் வாழ்வாக்கி வளமளிக்கும் தன்மையுடையது.

ஆன்மிக நஞ்சு

பழிக்குப் பழி என்ற உணர்ச்சி மனித உள்ளத்தை நின்றரித்துத் தின்னும் ஒரு புழு - அவன் ஆன்மிக வாழ்வையே கொல்லும் ஒரு நஞ்சு. சீற்றம் சாவுடன் சாவாக, சாவின் முன் கொந்தளிக்கும் காய்ச்சல் புயலின் ஆன்மாவையிட்டுஅெலைக் கழிக்கும்.

உயிராற்றல் அழியுமுன் அறிவாற்றல் அழித்து, அறிவாற்றல் அழியுமுன் உணர்வாற்றல் அழித்து அது சாவுக்கு இயற்கையாய் இல்லாத சாத்துன்பத்தை வாழும் உயிர்க்கு அளிக்கிறது. அஃது இழைக்கப்பட்ட தீங்கை மறவாது உள்ளத்தே ஏற்று வைத்துக் காழ்ப்பும் வன்மமும் காட்டுவது. அதுவே உடல் கடந்து மனத்தை, மனங்கடந்து சித்தத்தை, சித்தம் கடந்து உள்ளத்தையே உருக்கி வாட்டும் ஓர் அகக் காய்ச்சலாகும்.