உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(184) ||.

அப்பாத்துரையம் - 29

கிறான். இது தெளிவு. இவ்வெண்ணம் மேலும் மேலும் அவற்றை மீறி அச் செயல்களைத் தொடர்ந்து செய்யவே அவனைத் தூண்டிவிட முடியும். மனச்சான்றின் அமைதியைவிட, சமுதாய இணக்கத்தைவிட அந்த இன்பம் பெரிது என்ற அவனது மதிப்பு அவன் மனமார்ந்த தீமைச் செயலுக்குக் காரணம் என்பதில் ஐயமில்லை.

இருவகை மடமைகள்

ன்னொரு வகையில் சொல்லப்போனால், தீமை செய்பவர் பெரும்பாலார் கருத்தில் இன்பம் நல்லது, விரும்பத் தக்கது என்ற எண்ணம் நிலவுவது காணலாம். சமுதாய நீதிக்கு மேலாக, மனச்சான்று நீதிக்கு மேலாக, அவன் ஒரு நீதி வகுத்துக் கொள்கிறான். இன்பம் நல்லது, விரும்பத்தக்கது, ஆகவே அதனை நுகர்க என்பதே அந்த நீதி. அவன் அறியாமையின் வடிவம் இதுவே. ஏனெனில் புற உலகின் இன்பமும் துன்பமும் வேறல்ல, ஒன்றே என்பதை அவன் அறியமாட்டான். ஆகவே, இன்பமில்லாமல் துன்பத்தையோ, துன்பமில்லாமல் இன்பத் தையோ அடைய முடியும் என்று அவன் கருதுகிறான். இது மடமையாகும்.

ன்பத்தின் மறுதிசை துன்பம். துன்பத்தின் மறுதிசை இன்பம். ஒன்று வரின் மற்றது தொடராமலிராது.

று

இரண்டாவதாக, செயல்கள்பற்றிய மெய்ம்மையின் அமைதியும் அவனுக்குத் தெரியவராது. செயல்களால் துன்பம் நேரும்போது, தன் தவறுகளினால் மட்டுமே தனக்குத் துன்பம் வர முடியும் என்ற செயல் மெய்ம்மை அவனுக்குத் தெரியாது. அது தன் தவறுகளால் வந்தது என்றும் அவன் என்றும் கருதுவ தில்லை. அது மற்றவர்களின் தவறுதலாலேயே வந்திருக்க வேண்டும் என்று அவன் முடிவுகட்டுகிறான்.

மற்றவர் எவர் தவறுதலையும் கட்டிக்காட்ட முடியாத போதுகூட, அவன் சூழ்நிலைகளைத் துருவி அதிலோ அல்லது அது கடந்த ஊழ், விதி என்பன போன்ற மாயத் தெய்விக ஆற்றல்களிலோ அத்தவற்றின் பொறுப்பைச் சுமத்தவே முனை கிறான். தன்னை மட்டுமே அவன் இதில் தொடர்பு படுத்திக் கொள்ள முனைவதில்லை.