பேரின்பச் சோலை
183
என்போம். வானில் இந்த இருள் போன்றதே உள்ளத்தின் தீமை, பழி. அதை நாம் கண்டிக்கவேண்டியதில்லை. தற்பெருமை, செருக்கு, தன்னலம், தனி நலம் விட்ட அன்றே அது தானாக அகலும். கண்டிக்கவேண்டியவை தற்பெருமை, தன்னலமே யன்றி வேறு தீமை, பழிகள் அல்ல.
இருவகைத் தீமைகள்
தீமைக்கு மூலமான அறியாமை இருவகைப்படும். ஒன்று நன்மை தீமைகளின் இயல்புபற்றிய அறியாமை. தீய செயல் களுக்குக் காரணமான அறியாமை இதுவே. இது இயல்பானது, செய்பவன் செய்வதறியாது, வேறு வழியில்லாமல் தெரிந்த அளவில் செய்யப்பட்ட இதனைத் தெரியாது செய்யப்பட்ட தீமைச் செயல், அஃதாவது தவறான செயல் என்னலாம். ஆனால் இன்னொரு வகையான தீமை, தீய செயலும் உண்டு. செய்யத் தகாதது என்று தெரிந்தும் செய்யப்படும் செயலே அது. இதனை நாம் தெரிந்து செய்யப்படும் தீமை அல்லது மனமார்ந்த தீமை என்னலாம். ஆனால் அடிப்படையில் இரண்டுமே அறியாமை யின் பயனான செயல்கள்தான் - தவறான செயல்களின் நீடித்த பயன் பற்றிய உண்மையான இயல்பை அறியாத மடமையே இரண்டுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
ம
செய்யக்கூடாது என்று கருதுகிற செயல்களை மனிதன் தொடர்ந்து செய்வானேன்? செயல் தவறு என்று தெரிந்தே செய்யும்போது, அச் செயலில் எப்படி அறியாமை இருக்க முடியும்? இவை விடை காண வேண்டிய கேள்விகளே.
தவறு என்று அறிந்தவற்றை மனிதன் தொடர்ந்து செய் வதற்குக் காரணம் அவன் அறிவின் குறைபாடே. செய்யக் கூடாது என்று அவன் கருதியதற்குப் புற உலகில் அவன் எவரி மிருந்தோ, எந்த ஏட்டிலிருந்தோ கற்ற நீதி அடிப்படையாக அவன் உள்ளத்தின் உள்ளே ஏற்பட்ட மனச்சான்றின் தளர்ந்த குரலாக இருக்கலாம். எப்படியும் செய்ய இருக்கும் செயல் பற்றிய அறிவு குறைபட்டதாகவே அமையக்கூடும்.
அச்செயல்கள் உடனடியாக இன்பம் தருபவை என்று கருதியே சமுதாயக் கட்டளையையோ, மனச்சான்றின் எச்சரிக்கையையோ மீறிக்கூட அவன் அவற்றைச் செய்ய முற்படு