182
அப்பாத்துரையம் - 29
உலகம் முழுவதும் இன்பப் பாதையிலேயே செல்வதாக அவன் உணர்கிறான். துன்பம் என்பது இன்பத்துக்கான வழி காட்டி என்பதையும், இன்பப் பாதையிலிருந்து மனிதன் விலகிச் செல்வது பற்றி எச்சரிக்கும் அறிவுக்கல் என்பதையும் அவன் தெரிந்துகொள்கிறான். தூய்மை, தூய்மைக்கேடு, சரி, தவறு இவற்றை இன்னும் அவன் திரித்தறியாமலில்லை. ஆனால் எதிலும் தீமை என்ற ஒரு தனிப்பண்பு இல்லை என்னும் உண்மை அவனுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அவ்வெளிச் சத்தில் அவன் எல்லாப் பொருள்களையும் அவற்றின் மெய் வடிவில் மெய்ப்பண்பாகக் காண்கிறான்.
தன்னைத் தவிரத் தனக்குத் தீங்கிழைக்கும் புறப்பொருள் இல்லை என்பது அவன் உறுதி. புற உலகின் நிகழ்ச்சிகள் எதற்கும், மற்றவர்கள் செயல்கள் எதற்கும் தான் எத்தகைய எதிர் செயலும் செய்யத் தேவையில்லை என்பது அவன் அமைதிநிலை. தீமை செய்யாதிரு என்பதைவிட நன்மை செய் என்பதே அவன் குறிக்கோள். ஏனெனில் தீமை என்பது நன்மையின் இன்மை, நன்மைக்குத் தடை என்பது தவிர வேறன்று. இது செய்வதால் அவன் தீமைக்கு எதிரான நலமன்று, இயல்பான நேரான நலமே பெறுகிறான். தீமை மீதும் அவன் தீமை ஏவுவதில்லை. கோபத்தின் மீதும் அவன் கோபம் கொள்வதில்லை.
-
கவிஞர் பெருமான் ஷேக்ஸ்பியர் தம் நாடகப் பாத்திரங் களில் ஒருவர் மூலம் ஓர் உண்மை தெரிவிக்கிறார். அறியாமை யன்றி வேறு இருள் இல்லை என்பதே அது. தீமை யாவும் அறியாமையே, மனஇருளே. மனத்தகத்தே பழிநீக்கம் என்பது இருள் நீக்கம், மறைவு நீக்கம் என்பது மட்டுமே. இருள் நீக்கம் வேறு, ஒளி வருகை வேறல்ல. ஒளியின் மறைவான நிழலே இருள். இருள் நீங்குவது என்பது ஒளியின் வருகையே. இருள் என்ற பொருள் ஒன்று இல்லை. ஒளியின் இன்மையே இருள். ஆகவே மறைப்பகன்றதே எங்கும் உள்ள ஒளி அங்கும் இடம் கொள் கிறது. இதுபோலவே தீமையின் எதிர்பண்பல்ல நன்மை. நன்மை யின் இன்மையே தீமையாவதுபோல, தீமையின் இன்மையே, நீக்கமே நன்மையின் தோற்றமாகிறது.
உலகின் இரவின் இருள் வரும்போது, அந்த இருளை யாரும் பழிப்பதில்லை. பழிப்பவனை அறிவிலி, மூடன்