உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

181

தீமையைச் சரிசெய்யுமா? இரண்டும் சேர்ந்து இரண்டு தீங் காவதன்றித் தீங்கு அழிவதெவ்வாறு? அவன் செய்யும் தீமை அவனுக்கேயன்றி உனக்கன்று. அதில் நீ காட்டும் கோபம்தானே நீ செய்யும் தீமை அதுதானே உன்னைச் சாரும்? அப்படியிருக்க, நீ கோபப்படுவானேன், கடுகடுத்துக்கொள்வானேன்? பழி எதிர்பழி செய்வானேன்? அவன் செய்யும் தீங்கு அறியாமையால் விளைவதென்றால், நீ செய்யும் தீங்கு அதைவிட மோசமான அகப் பண்புக்கேட்டால், தற்பெருமையால் நேர்வது அல்லவா? உன் குறுகிய தன்னல உள்ளத்தால், மடமையின் திரையால், குருடான விலங்குணர்ச்சிகளால் அல்லவா?

பிறர் உனக்குச் செய்யும் தீங்கு உன் தற்பெருமையால் அல்லது செருக்கால் உனக்குத் துன்பமூட்டுவது போல, நீ செய்யும் தீங்கும், பழி எதிர் பழியும், கோபதாபச் செயல்களும் மற்றவர்களுக்குத் துன்ப மூட்டுமல்லவா? நீ உன் தீங்கை நாடி, அதன் காரணமறிந்து தற்செருக்ககற்றி விட்டால், அடுத்தபடி மற்றவர் தீங்கின் காரணமும் அறிந்து ஒத்துணர்வுகாட்டி அவர்கள் தீங்கும் அகற்றலாமல்லவா? நீ முன்பு தீங்கின் இயல்பறியாது தீங்கிழைத்தது போலத்தான் பிறரும் அவ்வியல் பறியாது உழல்கின்றனரென்று நீ அறிந்தால், அதன்பின் கோபதாபத்துக்கு இடம் ஏது? மன்னிப்புக்குத்தான் இடமேது? தீங்குகாணாது அறியாமை மட்டுமே கண்டு ஒத்துணர்வுடன் அமைதியாகச் செயலாற்றும் பண்பு ஒன்றே உன்னிடம் தங்க வேண்டும், அது ஒன்றே தங்கட்டும்!

உயர்தளப் பண்பின் உரு

தன்னிடமே இவ்வாறு கேள்விகள் எழுப்பித் தன் னாராய்வில் இறங்குபவன் உணர்ச்சி நீங்கிய அமைந்த சிந்தனை மூலம் உணர்ச்சிகளைப் படிப்படியாக வெல்கிறான். உணர்ச்சி களைத் தூண்டுகிற மடமையும் அவனைவிட்டு அகலுகிறது. அவன் பேரின்ப எல்லையடைகிறான். அடைந்ததும் பிறரிடம் தீமை காணும் பண்பையே ஒழித்துவிடுகிறான். உலகெங்கும் அவன் ஒரே அன்பும் நேசமும் அமைதியும் காண்கிறான்.

அவன் கண்ணுக்கு இப்போது தெரியும் வேறுபாடு அறியாமை, அறிவு, நேர்வழி, சுற்றுவழி என்பவைதான்.