உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210 ||

அப்பாத்துரையம் - 29

பெ: ஆம், அதுமட்டுமல்ல. பிறர் செய்வது தீமை, அவர்கள் தீயவர்கள் என்று கருதும்வரை ஒருவன் மற்றொருவன்மீது தொடர்ந்து உள்ளத்தில் கோபமோ, வெறுப்போ கொள்ளாம லிருக்க முடியாது. செயலுக்குத் தூண்டுதலான உணர்ச்சி களின்படி அவர்கள் செயல்செய்து, அக்கருத்துக்கள், செயல் களின் பயனை அவர்களே அனுபவிப்பதால், துன்பங்களையனுப் விக்கிறார்களே என்று கவலையும் இரக்கமும் கொள்ளவோ, இன்பப்பயிர் அறுவடை செய்கிறானென்று மகிழவோ செய்வானானால், அது மிக உயர்ந்த உள்ளுணர்வுநிலை, அப்பழுக்கற்ற அன்பமைதி நிலை ஆகும். அதனை மனிதன் அடைதல் கூடாததன்று என்று எண்ணுகிறேன். அந்த நிலையை அடைய வேண்டுமானால், எல்லா மக்களிடத்திலும் ஒத்த அன்பும் கனிவும் காட்ட வேண்டும்.

அ: நீங்கள் சித்தரித்துக் காட்டும் நிலை மிக உயர்ந்த நிலை என்பதில் ஐயமில்லை. மிக அழகிய புனிதமான நிலைதான். ஆனால் அதைச் சென்றடைய நான் விரும்பவில்லை. ஏனெனில் அந்த நிலையிலிருந்து நான் எ.யை வெறுக்க முடியாது. என் மனதாரப் பழிக்க முடியாது. வேண்டாம் அந்த நிலையிலிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றட்டும்.

தற்குருட்டுப் பண்பு

இந்த உரையாடலின் முடிவிலிருந்தே அ. என்னும் இவ் வரசியல்வாதி கருத்தில் வெறுப்பு மிக நல்ல பண்பு என்பதும், விரும்பத்தக்க பண்பு என்பதும், கைவிடத்தகாத, இழக்கத்தகாத கடும்பண்பு என்பதும் எளிதில் புலனாகின்றது. இந்தப் பேர்வழியைப் போலத்தான் உலகில் பெரும்பாலாரும் தாம்தாம் செய்வதை இன்றியமையா அவசியச் செயலாகக் கருதுகின்றனர். குடிப்பவன் குடி அவசியமென்று கருதுகிறான். வஞ்சிப்பவன் வஞ்சிப்பது தனக்கு அவசியம், நலந்தருவது என்றுதான் கருதுகிறான். மனிதர் தாம் வழக்கமாகச் செய்ய விரும்புவதையே நம்புகிறார்கள். நம்புவதையே வழக்கமாகச் செய்கிறார்கள். ஒரு பொருளில் விருப்பமோ, நம்பிக்கையோ அற்றுவிட்டால், அந்தக் கணமே அவ்வழக்கமும் நின்றுவிடுகிறது.

மேற்குறிப்பிட்ட அ. அரசியல்வாதிக்கும் எல்லாருக்குமே தனி மனித உரிமை - தாம் விரும்புவதை, நம்புவதைச் செய்வ