உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

(221

ன்பமாகப் பரிமளிக்கும். பொதுநலத்திலிருந்து இன்பத்துக்குச் செல்லும் வழி இவ்வாறு எளிதான, கவர்ச்சிகரமான வழியே யாகும். ஆனால் அந்தப் பொதுநலம் அவ்வளவு எளிதாகத் தோன்றிவிடுவதன்று. துன்பத்தின் நீடித்த பயிற்சியின்றி அது கைகூடாது. தன்னலம் பொதுநலமாக 'ஆவது’ நீடித்த துன்பத்தின் செயலேயாகும். ஏனெனில் ‘ஆவது' என்பது பிறப்பது போன்றது. அப்புத்தாக்கத் துன்பம் இவ்வாறு புத் துயிரின் பேறுகாலத்தில் உண்டாவது; பேறுகாலத்தில் தாய்க்கு ஏற்படும் வேதனையுடன் அது பெரிதும் தொடர்புடையது.

தாய் எத்தனை உயிர்வேதனையடைந்தாலும், பிள்ளை முகம் கண்டவுடன் அது எப்படி அகன்றுவிடுகிறதோ, அது போலத் தன்னலம் பொதுநலமாக மாறும் காலத்திற்குள் எத்தனை துன்பங்கள் உயிரை வாட்டினாலும், பொதுநலப் படி கிட்டியபின் அத்துன்பமெல்லாம் இன்பமாக மாறும். துன்பமே தன்னலமென்னும் கீழ்த்தரக் கலவை உலோகத்தின் களிம்புகள் அகற்றி, மாசுகள் சுட்டெரித்து, கலவைகளைக் களைந்து, அதனைப் பொதுநலமாகும் மாசுமறுவற்ற பத்தரை மாற்றுச் சொக்கத் தங்கம் ஆக்கிவிடுகிறது.

இந்நிலையடைந்தவன் முழுநிறை மனிதனாகிறான். உலகை முழுநிறை இன்ப உலகாக, இன்பமிளிரும் இயற்கையின் புத் துருவாக, இன்ப உருவினனான கடவுளாக, பேரருளின் பிறங்கொளியாகக் காண்கிறான். அறிவு கலவாத உணர்ச்சிப் பித்தன் நிலைக்கெதிராக, அவன் உணர்ச்சி கலவாத அறிவுப் பித்தனாகிறான்.இந்நிலையையே,

36

அழகின் ஆரொளி ஆற்றலின் பேரொலி அன்பில் பழகும் இன்ப அலை தவழ் மாகடல்

பண்பு

நிலைகள் சூழல்கள் உணர்ச்சிகள் கருத்துகள் செயல்கள் கலைகள் ஆகும் தன்னாட்சியின் அரும்பரப்பு அதுவே.

அழகின் சிரிப்பு, இன்பம்

செடியின் வாழ்வு அழகு மலரின் வாழ்வே. அது வித்தி லிருந்து தோன்றி வித்துக்குச் செல்கிறது. ஆனால் மலர்ச்சியே செடிவாழ்வின் மையப்பகுதி, உயிர்நிலைப்பகுதி. செடியின்