உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




220 ||

அப்பாத்துரையம் - 29

புறச்சின்னங்களை வலியுறுத்தி அவற்றினடிப்படையிலே சமயப் போரும் கலாமும் விளைவித்து, உண்மைச் சமயப் பண்பிலிருந்து, உண்மைச் சமயத்துறையிலிருந்து மக்களை விலக்கி வைத்தனர். ஆசாரியர்களின் அறவுரையின் உயிர்க்கூறு மக்கள் கண்களி லிருந்து, அறிவிலிருந்து, சிந்தனையிலிருந்து மறைக்கப்பட்டே, மறக்கடிக்கப்பட்டே, இருட்டடிக்கப்பட்டே வந்துள்ளது,

வருகிறது.

டி.

உலக ஆசாரியர் இன்பத்தைக் குறிக்கோளாகக் காட்டி னாலும், பெரிதும் துன்பத்தைப் பற்றியே அடிக்கடி பேசி யுள்ளனர். ஆனால் அவர்கள் துன்பத்தை ஒரு பாதையாக, ஓர் இடைவழியாகவே கருதினார்கள் என்பது தெளிவு. அவர்கள் காட்டிய இன்பப் பாதையில் துன்பம் இன்பமாக மாறும் கட்டம் வரும்வரை அது மக்களுக்கு துன்பப் பாதையாகவே காட்சி யளிக்கக்கூடும். துன்பத்தைப் பற்றியே அவர்கள் மிகுதியாகப் பேசியதன் காரணம் இதுவே. தவிர, துன்பம் இன்பமாவதன் மறைதிறவு, தற்பற்றின் துறவிலேயே உள்ளது. தற்பற்று விட்ட இடம் துன்பம் அற்ற இடம். ஆனால் உயிர் மலர்ச்சியின் முதற்படிகளில் தற்பற்றுத் துறவு இன்ப அவாவில் தோன்றுவ தில்லை. துன்பச் சிந்தனையிலேயே தோன்றும்.

இன்பம் நாடுபவன் தனக்காகவே இன்பத்தை விரும்பு கிறான். ஆனால் துன்பமனுபவிப்பவன் தன்னைவிட்டு வெளியேதான் ஆறுதல் தேடுகிறான். துன்பத்தைக் காண்பவன் இயல்பாக மற்றவர்கட்கு ஆறுதல் தருகிறான். மற்றவருடன் ஒத்துணர்வு கொள்கிறான். தன்னையறியாமலே மற்றவர் துன்பத்தைத் தன் துன்பமாக ஏற்றுப் பங்கு கொள்கிறான். துன்பத்தின் இத்தற்பற்றுத் துறப்பின் ஆற்றல் கருதியே உலக ஆசாரியர்கள் துன்பச் சிந்தனைக்கு முதலிடம் அளித்தனர்.

அறிவுகலவா உணர்ச்சிப் பித்தன், உணர்ச்சி கலவா அறிவுப் பித்தன்

இன்பம் நேர்மையின் பிள்ளை. நேர்மையோ பொது நலத்தின் தோழன். நேர்மையூடாகப் பொதுநலமே இன்பம் துய்க்கும் தகுதிபெறும். பொதுநலவாணன் உள்ளத்தில் பரவி யூடாடும் அன்புக் கனிவும் அருளிரக்கமும் நேர்மையுடன் கலந்து