உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

219

ஆரவாரப் பகட்டின்பம் அன்று. துன்பத்தொடக்கற்ற, கண்ணீர் கரவாத இந்த இன்பம் தன்னலமற்ற ஒவ்வொரு வாய்மைக் கருத்திலும் செயலிலும் ததும்பி நிற்கின்றது.

தன்னலம் அற்ற அளவே இன்பம் உற்ற அளவு

ஒவ்வொருவனும் தன்னலமற்ற அளவிலே, பொதுநலப் பாசங்களிலேதான் உண்மை இன்பம் அடைகிறான். தன்னல அளவிலன்றி அதற்கு மேம்படத் துன்பம் அவனை அணுகுவ தில்லை. எல்லா நல்லோர்களும், தன் முனைப்பு அல்லது ஆணவத்தை எதிர்த்து வெற்றி கிட்டும்வரை, போரிட்ட வீரர் களான நல்லவர் ஒவ்வொருவரும் இன்பவாணரே. அப்படி யானால் பெருவீரரான அறிஞர், ஞானிகளின் இன்பத்தை யாரே அளந்து காணவல்லார்?

எல்லா உலக ஆசாரியர்களும் இந்த இன்பத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள், இதை நோக்கியே மக்களை அழைக்கி றார்கள். உண்மையான எந்த உலக ஆசானும் துன்பத்தைச் சுட்டிக்காட்டி, அதைக் குறிக்கோளாக்கி, அதை நோக்கி மக்களை அழைக்கமாட்டான். அழைக்கவுமில்லை. அழைத்தால் கூட, மக்கள் அவர்களை உலக ஆசாரியர்கள் என்று ஏற்றிருப் பார்கள் என்று நம்ப முடியாது.

உலக ஆசாரியர்கள் இங்ஙனம் ஒரே இன்பக் குறிக்கோளைச் சுட்டிக்காட்டி அதை நோக்கியே மக்களை அழைத்தாலும் முற்றிலும் ஒரே வகைப்பட்ட வழியையும் காட்டவில்லை, முற்றிலும் ஒன்றுபட்ட கருத்தையும் மேற்கொள்ளவில்லை. உலக மக்கள் அவர்களைப் பின்பற்றும் வகையில், போலி அறிஞர், போலிச் சமயவாதிகள் இவ்வேறுபாட்டைப் பயன்படுத்தித் தான், அந்த ஆசாரியர் அரும்பணிகளை விழலுக்கிறைத்த நீராக்கியுள்ளனர். அந்த ஆசாரியர்கள் அனைவரும் ஒன்றுபட்ட இடம்தான் அவர்கள் அறிவுரையின், அறிவுரைக் கோட்பாட்டின் உயிர்நிலைக்கூறு. இதைப் போலிச் சமயவாதிகள் தாமும் கைநெகிழ விட்டனர். மக்களும் அவற்றைக் கைநெகிழ விடும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்! ஒன்று பட்டு எல்லா ஆசாரியரும் கூறும் அவ்வுயிர்ப் பகுதியைத் திறம்பட மக்கள் கண்களிலிருந்து மறைக்க, அவர்களிடையே யுள்ள சில்லறை வேறுபாடுகளை, உயிரற்ற சக்கைவாதங்களை,