பேரின்பச் சோலை
241
அவன் அகத்தூய்மையில் கறையுண்டு பண்ணி, அகத் தூய்மை யிடையேயும் தூசு பரப்பி மாசு வளர்த்துக்கொண்டே இருக்கும்.
தருக்கு, தற்பெருமை, தற்பற்று ஆகியவைகளை அகற்றுந் தோறும் உள்ளத்தடத்தின் ஆழத்தில் சென்று மறைந்திருக்கும் மனநைவின் தடமும் மாறாமலிருந்து கொண்டேவரும். ஆனால் அவை மறைய மறைய, சிறு பகைமைகள், வெறுப்பு விருப்புக்கள், உன்னை எளிதில் பாதிக்கமாட்டா. காழ்ப்புரையும், வசை யுரையும், பழி மொழியும் அத்தகைய ஆழ்ந்த அமைதியை அசைக்கமாட்டா. ஆழ்ந்த அடித்தளமுடைய கல்வீட்டின்மீது புயல் எவ்வளவு கொந்தளித்து ஆரவாரித்தாலும் வீட்டை எப்படி அசைப்பதில்லையோ, அப்படியே மெய்யுணர்வால் அரண் செய்யப்பட்ட அந்த அமைதியைத் தீமை ஒன்றும் செய்ய முடியாது.
புறப்புயலிலும் குளிரிலும் வீட்டுக்குரியவன் கதகதப்பான தணலடுப்பருகே யிருந்து வெதுவெதுப்பும் அமைந்த குடும்ப இன்பமும் அடைவதுபோல, அக அமைதியுடையவன் உலகின் கொந்தளிப்பூழிகளில் கூடத் தன் அமைதி மனையில் அயர்ந்து இன்பம் நுகர்கிறான். தன்னையாளா ஆற்றல்களே அகப் புயல்கள். இயற்கையில் சமநிலைக் கேட்டால் புயல் ஆட்டும் போதும், அவன் உள்ளே தன்னாட்சி, சரிசமநிலையின் சின்ன மான அமைதி இன்பம் நிலவும். ஆரவாரப் பாலையிடையே அவன் ஒரு மோனத் தண்டலையில் தங்கி மகிழ்கிறான். தன்னை வென்றவன் மாறா அமைதி இது.
46
அழுக்காறும் வன்பழியும் அடல்வெறுப்பும் நோவும்
இழுக்கான இன்பமெனும் அமைதிக் குலைவு மவன் விழுப்பம் அடுப்பதில்லை, வீண்துயரும் தொடுப்பதில்லை!
பேச்சும் செயலும்
அழுத்தந்திருத்தமான பேச்சும் ஆரவாரமான விளம் பரமும் இல்லாமல் எந்தக் காரியமும் நிறைவேற முடியாதென்று நம்புகிறவர்கள் உண்டு. இது முழுவதும் தவறு. மிகுதியாகப் பேசுபவர் ஆழ்ந்த சிந்தனையுடையவராக இருக்க முடியாது. சிந்தனையாளர் அமைதியும் மோனமும் பேணுபவராக மட்டுமே