(242
அப்பாத்துரையம் - 29
இருக்க முடியும். ஆனால் ஆரவாரப் பேச்சாளர் இதை உணர்வதில்லை.
மோனச் சிந்தனையாளன் எதுவும் செய்யாதவன், செய்ய மாட்டாதவன், ஏலமாட்டாதவன் என்றுகூட அவர்கள் எண்ணு வதுண்டு. ஏனெனில் அவர்கள் அறிந்த செயல் விரைவது, படபடப்பது, இடைவிடாத கொக்கரிப்பு ஆகியவைகளே. அவற்றைச் செய்துவிட்டாலே பெருஞ் செயல் செய்துவிட்ட தாகக் கருதிவிடுகிறார்கள். அத்துடன் அவர்கள் மக்கள் பேராதரவையே ஆற்றல் என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மை உழைப்பாளி என்பவன் - திறம்பட்ட செயலாளன் என்பவன் சிந்தித்துச் செயலாற்றுபவன் மட்டுமே. அவன் உழைப்பே எல்லா வெற்றிகளுக்குமுரிய வெற்றியின் உயிர்க் கருவாகும்.
-
இயற்கை எப்படி நிலத்திலும் வானிலும் பரவிய உயிரற்ற பொருட் கூறுகளைத் தன் சந்தடியற்ற, ஆரவாரமற்ற, மறைவான ஆற்றலால் இலைகளாகவும், மலர்களாகவும், கனிகளாகவும் மாற்றிவிடுகிறதோ - அழகும் பயனும் ஆற்றலும் மிக்கன ஆக்கி விடுகிறதோ - அதுபோலவே வாய்பேசாத மோன உழைப்பாளி மனிதர் உள்ளத்தையும் இயற்கையின் பரப்பையுமே தன் மாய மோன ஆற்றலால் முற்றிலும் மாற்றியமைத்து விடுகிறான்.
பொருள்களின் மேற்பரப்பை மாற்றியமைக்கும் சிறு திற விளையாட்டுக்களில் உண்மை உழைப்பாளி தன் நேரத்தை வீணாக்குவதேயில்லை. நேரே அவற்றின் உன்ளுயிர்க் கருத் தளத்துக்குச் சென்று அதன் உறுதியான அடிநிலத்திலிருந்து யாவும் கட்டமைக்கிறான். உண்மையில், அவன் இயற்கையில் ஒன்றுபட்டு மறைந்தபின்னும் அவன் செயல் உயிர்ப்புடன் நின்று செயலாற்றும் ஆற்றல் கொண்டது. செயலில் ஈடுபட்டிருந்த காலத்தில் எவர் கருத்தையும் கவராத அவன் செயற் கூறுகளே உண்மையில் அவனது அழியாச் செயல்கள். உலக முழுவதையும் - அவன் செயலருமை அறிந்தவர்களும் சரி, அறியாதவர்களும் சரி, இரு சாராரும் உட்பட்ட உலக முழுவதையும் அவை இன்புறுத்தி நலம் வழங்குகின்றன.
பேச்சாளன் செயலான பேச்சு இதற்கு நேர்மாறாக அவன் பேசும் சமயம் செல்வாக்கும் ஆற்றலும் அளிப்பது போலக்