உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

243

காட்சியளித்து, உண்மையில் காற்றுடன் காற்றாகக் கலந்து அழிந்து விடுகின்றது. ஒலியை விதையாகக் கொண்டு உலகம் வளரவில்லை - செயலை விதையாகக் கொண்டே வளர்கிறது. ஜார்ஜ் பாக்ஸ் சமயக்குழுவின் சாதனை

உள ஆற்றல்களைச் சேமித்துத் தேக்குபவன் உடலாற்றல் களையுந் சேமித்துத் தேக்குபவனேயாகிறான். ஏனெனில் மன அமைதியும் மன ஆற்றலுமே உடலமைதிக்கும் உடலாற்றலுக்கும் அடிப்படை. அவன் நிறைஉள நலனுடன் நிறைஉடல் நலமும் பெற்று, நீடித்தகாலம் உடலுடனே வாழும் பேறுபெறுகிறான். உடற்கூறுகளும், உளக்கூறுகளும் முற்றிலும் தமக்குள்ளும் ஒன்றுக்கொன்றும் ஒத்திசைவதால், அவனாக விருப்புடன் ஓய்வு மேற்கொண்டாலன்றி, அவன் உடல் அமைதி உள அமைதி யினின்று விலகித் தளர்வுறுவதில்லை. ஓசையாரவாரம் இந் நலங்கள் தரமாட்டா.

கிறித்தவ சமயத்தில் மோனத்தின் பெருமையை வலி யுறுத்தி, மோன வழிபாடு, மோன வாழ்வு பேணியவர் ஜார்ஜ் பாக்ஸ் பிரிட்டனில் வாழும் மக்களிடையே அவர் சமய மரபினரே நீடித்த வாழ்விலும் உடல்நல உறுதியிலும் முதன்மை யுடையவராய் இருக்கின்றனர். வாழ்விலும் வளத்திலும்கூட அவர்கள் வெற்றி பிறர் கண்டு வியக்கத்தக்கதாகவே உள்ளது. இதற்குக் காரணம் சமயப் பெயராலேயே அவர்கள் மேற் காள்ளும் பண்புகளே. அவர்கள் வாயாடுவதில்லை, நேரம் வீண்போக்குவதில்லை. அமைதியான, எளிமையான வாழ்வுகள் வாழ்கின்றனர். எப்போதும் அவர்கள் தங்கள் குறிக்கோளை முன்வைத்து, அதிலிருந்து கண்மறையாமல், அதை ஆரவாரத்தில் மறக்காமல், மறைக்காமல் வாழ்கின்றனர்.

மோனம் கடவுளாற்றல் என்ற தத்துவத்தைப் பின்பற்றி வகுக்கப்பட்ட வாழ்வு, சமயநெறி, அவர்களுக்குக் கிட்டியுள்ள விலைமதிக்க ஒண்ணாகப் பெரும்பேறு!

மோனம் ஆற்றல் வாய்ந்தது. ஏனெனில் அது தன்னடக் கக்கத்தின் விளைவு. எவ்வளவு முழுநிறைவாக ஒருவன் தன்னை அடக்குகிறானோ, அந்த அளவு முழுநிறைவாக மோனம் அவனுக்குக் கைகூடுகிறது. ஆரவாரப் போலி இன்பங்களில், புற