(244) || __.
அப்பாத்துரையம் - 29
ன்பங்களில் மனம் செல்லாமல் இந்த மோனமே தடுக்கிறது. வாழ்க்கைக் குறிக்கோளில் அஃது உள்ளத்தை இருத்துகிறது. இந்த இரண்டும் சேர்ந்து உள்ளத்தின் அமைதியை, பண் பமைதியாக்குகிறது; மாறுபாடும் வேறுபாடும், முரண்பாடும் இல்லாத ஒத்திசை பண்ணுடைய இன்ப அமைதியாக்குகிறது.
புறக்கோளாறுகள் இவ்வக இசையைக் கெடுப்பதில்லை. இந்த மோனத்தின் ஆழத்திலிருந்து, இந்த அக அமைதியிலிருந்து, என்றேனும் சொற்கள் எழுந்தால், அவை உயிர் நோக்கமுடைய, தெய்விக ஆற்றலுடைய சொற்களாய், அந்த மோனத் தேக்கத்தின் முழு ஆற்றலும் உடையனவாக இயங்குகின்றன. நினைத்ததை ஆக்கும் அவர்கள் ஆற்றல் சொன்னதையும் நாட்டும் ஆற்றல் ஆகிவிடுகிறது. மோனப் பயிர்ப்பு சொல்லாற்றலை வளர்க்க, சொல்லாற்றலே மீண்டும் மோனம் வளர்க்க - அவர்கள் மோன ஆற்றலில் சொல்லாற்றலும், சொல்லாற்றலில் மோன ஆற்றலும் புக்கிணைத்துப் பேராற்றலாகின்றன.
அவன் சிந்தனை இன்பமே பயக்கிறது. துன்பத்தை அவன் உளத்தால்கூடத் தீண்டுவதில்லை. அத்துடன் அவன் உள்ளம் தீண்டுபவை யாவும் இன்பமாய் விடுகின்றன. அவன் சொற்கள் இன்பமே பயக்கின்றன. இன்பமே பரப்புகின்றன. அவன் செயல்களோ அவனோடு உலகையும், உலகோடு அவனையும் இணைத்து இன்பத்துக்கே இட்டுச் செல்கின்றன. துன்பமும் கண்ணீரும் அவன் எல்லையிலிருந்தே தொலைவாக அகன்று விடுகின்றன; அவன் உலகிலேயே இடமில்லாமல் அவை மேன்மேலும் தொலைவாகத் துரத்தப்பட்டுக் கொண்டே செல்கின்றன.
முதிர்ந்த சிந்தனையின் பயனாகவே கருத்தெழுச்சி
காண்டு சொல்லிலும் செயலிலும் இறங்கும் அவனுக்குக் கழிவிரக்கமோ, மனச்சான்றின் குத்தல் என்பதோ இருக்க முடியாது. உண்மையில் உள்ளம்வேறு மனச்சான்று வேறு என்னும் நிலையோ, உணர்ச்சி வேறு அறிவு வேறு என்ற நிலையோ, அவா வேறு மதி வேறு என்ற நிலையோ அவனிடம் இருக்க முடியாது. யாவும் ஒன்றாம் அமைதிநலம் அவன் வாழ்வில் மலர்வுற்று மணம் கமழ்கின்றது.