உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11. தனிமை

1அகமிருக்க மோனத்தின் அமைதி தரும்சேதி புறஞ்சென்று தேடுவதேன் பொழுதவமதாக? அருகிருக்கத் தாழ்நிலத்தே பேரின்பச்சோலை பெருமலையின் பேருச்சி ஏறி இறங்குவதேன்? சிறுகுடியில் மோனமுனி சிந்தனையின் வானத்து உறு பகலும் ஓவாவிண்மீன் ஒளிகண்காட்டக் காத்திருந்தும் இராத்தேடி மாளிகையைநாடி ஆத்திரங்கொண்டோடோடி அலைந்திடுதல் ஏனோ?

2உணர்வலைகள் பாயாத ஓய்வமைதி நேரம் கணத்தறிந்து நெஞ்சணவு கருத்தெழுப்பி ஆள்க!

- விட்டியர்.

வேர்ட்ஸ்வொர்த்.

மனிதன் உயிர்நிலை அகநோக்கியது, புலங்கடந்தது, காட்சிக்கெட்டாத ஆன்மிகத் தன்மை வாய்ந்தது. ஆகவே அதன் உயிராற்றலும் உயிர் வலிமையும் புறமிருந்து தோன்றுவதன்று, அகநின்றெழுவதே.புறப்பொருள்கள் யாவும் அதன் ஆற்றல்கள் பொங்கி வழிந்தோடும் கால்கள், பொறிகலங்கள் மட்டுமே. அதன் உயிரூற்று, புதுவரவுக்குரிய உயிர் மூலதனம் புறத்தேயில்லை. அதை மீண்டும் அகம்சென்று, அகத்தின் மோனச் சேமவைப்பில் சென்றுதான் பெற முடியும். ஒலிகளுக்கெல்லாம் மூலமான மோன ஒலி, ஒளிகளுக்கெல்லாம் மூலமான நிழலற்ற நிலவொளி அதுவே!

புலனுணர் வின்பங்களின் கம்பலையிலே அமைதியின் மோனத்தை அமிழ்த்தி மறையவிடுந்தோறும், ஒருவன் புற உலகின் பூசலிலே தன்னை இழந்துவிடுகிறான். அகத்தே நிலவும் இன்பந் தொலைவாக விட்டு, துன்பத்தின் புயலும் துயரின்