பேரின்பச் சோலை
247
க்
அலைக்கழிப்பும் வாழ்வில் தோய விடுகிறான். இன்ப அறுவடைக் குரிய வாழ்வு இங்ஙனம் துன்ப அறுவடையைப் பெருக்கி, அந்த இன்ப அறுவடைநாளை இன்னும் நெடிதாக ஒத்திப் போடுகிறது. துன்பம் மேன்மேலும் பெருகி, அந்தச் சுமை பொறுக்கமாட்டாத நிலை வருமளவும்,அத்துன்பவாணன் தன்னுள்ளே ஆழ மறைந்து கிடக்கும் அக ஆறுதலை நாடாமல் அழுந்துகிறான்.
அகப்பசி, அகவிடாய், துன்பம்
உடலைக் கூலங்களின் அகப்பருப்பாகிய அரிசிதான் பேணும். புறத்தோடு, உமி பேணமாட்டாது. அதுபோல உயிர் நிலை புறப்பொருள்களின் இன்பத்தால் பயன்பெறாது.அவற்றின் அகப்பண்புகளே, அக இன்பக் கூறுகளே அதற்கு உயிரூட்டம் தரும். அகப்பண்புகளால் இவ்வுயிரூட்டம் பெறாத உளமும் உடலும் உயிர்ச்சத்துக் குன்றித் தளர்கின்றன. உடற்பசி கடந்த இந்த உள்ளுயிர்ப்பசி, உடல் விடாய் கடந்த இந்த உள்ளுயிர் விடாய்தான் துன்பம். அது தீர்க்கும் உணவாகிய அக இன்பம் பெறாவிட்டால், உள ஆற்றலும், உடலாற்றலும் இரண்டுமே சீர்குலையும். உயிர் மேன்மேலும் தளரும்.
உயிரின் தளர்ச்சியை நீக்க முயலுபவன் அக இன்பத்தை மோனத்தால், மோனத்தைத் தனிமையால் பெருக்க வேண்டும். மோனத்தை விரும்பும் முனிவர்கள் ஆரவார உலக வாழ்வை முனிந்து தனிமை நாடுவதன் காரணம் இதுவே. அவர்கள் வாழ்வை வெறுத்தோ, வாழ்வின் இன்பம் வெறுத்தோ செல்வ தாகப் பலர் எண்ணுகின்றனர். வாழ்வை, வாழ்வின் இன்பம் நாடியே செல்கின்றனர்.
பசியின் மிகுதி சுவையின் தொடக்கம். துன்பத்தின் மிகுதி ன்பத்தின் தொடக்கம். குற்றத்தின் மிகுதி திருத்தத்தின் தொடக்கம்.ஆனால் இம்மிகுதிகள் திசை திரும்பும் மிகுதிகள் ஆக வேண்டும். கிறிஸ்தவர்களல்ல, இயேசு பெருமான் குறிப் பிட்ட கழிவிரக்கம் இது. அவர் தம்மை நோக்கி அழைத்த ஏழையர், பழிகாரர் உண்மையில் இத்திசை திருப்பம் அடைந்த பழிகாரர், ஏழையரே. பழிநாடும், ஏழ்மைநாடும் ஏழையரல்ல - பழிபோக்க விரும்புகிற, ஏழ்மை அகற்ற விரும்புகிற பழிகாரர் ஏழையர்களே.