உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(248) ||

அப்பாத்துரையம் - 29

கெட்டலைந்து மீண்ட புதல்வன் கதை இதற்குச் சான்றளிக் கிறது.கெடுமட்டும் அவன் கெட்டான். அலையுமட்டும் அவன் அலைந்தான்.ஆனால் அவன் திரும்புகிறான், அகநோக்குகிறான். புற உலகத் தந்தையும்சரி, அக உலகத் தந்தையும் சரி, இங்ஙனம் திரும்புபவனுக்காகவே ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

உணவின்றிப் பசித்தலைந் தலுத்தவனுக்குப் புத்துணர்வு காத்திருக்கிறது. நீரின்றித் தவித்தலைந் திளைத்தவனுக்கு நறுநீரமுதம் பதமுடன் செவ்விநோக்கி யிருக்கின்றது!

தட்டு, திறக்கப்படும்! கேள், தரப்படும்!' என்ற வாய் மொழியுரைகளின் வளமும் இதுவே.

துன்ப இருளில் தோய்ந்த முந்திய உயிர் ஒளியின் திசை நோக்கி இரங்கும் ஏக்கமே துன்பத்தில் இன்ப நிழல் காட்டும் திருப்பம்.

மோனத்தின், தனிமையின் இன்றியமையாமை

உயிரின் துடிப்பைப் புற உலகுக்குக் கொண்டு வந்து உலகின் துடிப்பில் பங்கு கொள்ள வைப்பவை புலன்கள். ஆனால் அவ்வுயிர்த் துடிப்பின் தொடர்பைப் புலன்கள் புற உலகின் ஆரவாரத்திலிருந்து, அப்புயலில் மிதக்கத் தொடங்கிவிட்டால், துன்பத்தின் முதற்பகுதி, தண்டனைத் துன்பம் தொடங்கி விடுகிறது.

இந்தப் படியிலேயே புலன்களை இன்னும் புறநோக்கி, கீழ்நோக்கி இழுக்கும் இழிந்த அவாக்கள் தலைதூக்குகின்றன. இவை தம்மைத்தாமே பெருக்கி, அக இன்பத்தை மேன்மேலும் தொலைவாக்கி மறக்கடிக்கின்றன. இன்பத்தின் திசையில் சற்றுத் திரும்ப உதவும் இடை ஓய்வுக்குக்கூட இடமில்லாதபடி டையறா ஆரவாரப் போலி இன்பங்களிலும் துன்பங்களிலும் சுழலவைக்கின்றன.

உயிரின் உயிர்ப்பாற்றல் இச்சுழற்சியினால் மிகுதியும் தேய்வுற்று நலிகிறது. தேய்வகற்றப் போதிய அமைதி கிடைக்க வொட்டாமல் புலன்கள் சூழலடுத்த புறப்பொருள்கள் மீதே சென்று சென்று பற்றிப் படர்கின்றன. தனிமையன்றி வேறெதுவும் இப்புறச்சுமையிலிருந்து உயிருக்கு ஓய்வுதர

முடியாது.