உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(278

அப்பாத்துரையம் - 29

விளைவிக்க முடியும். அதுபேல புறவாழ்வில் ஈடுபட்ட எத்தனை பேர் கூடியும் ஓர் இனவாழ்வின் இன்பம் காண முடியாது. உண்மை அகவாழ்வொளி, அன்பு, காணாது, புறம் வெறுத்து ஒதுங்கி வாழ்பவரும் எத்தனை பேரானாலும், அது காண மாட்டார். இனமளாவிய அகத்தில் தனிமையில் ஒதுங்கி னப்பண்பாகிய அன்பொளி பேணியவர் மட்டுமே, அகத்தில் இன்பம் காண்பர். அதைப் புறத்தும் பரப்புவர்.

தன்னுரிமை என்பது தற்சார்பு. ஆனால் அது வெறுப்புடன் ஒதுங்கிய தற்சார்பு அன்று, ஒத்துணர்வில் உலகளாவிய அன்புத் தற்சார்பு - அதுவே உண்மை விடுதலை. அது கைக்குக் கையாய் உதவும் கருவி கலம் - வீண் சுமையன்று. அது கையழகுக்கு அழகு செய்யும் வளைகாப்பு - வெறும் விலங்கல்ல. அது செயல் தடுப்பதல்ல, துன்பம் தருவதல்ல - அழகும் இன்பமும் தருவது.

நாடி விரும்பி முயன்றுபெற விடுதலை, தற்சார்பின் சின்னம். அஃது இன்பம் தருவது. அதனை உடையவன் மெய்யுணர் வமைதி பெறுகிறான். அதனை வழங்குபவன் இன்பம் அடைகிறான். அவ்வின்ப நலம் ஆற்றலை எங்கும் வழங்கி, வழங்கியதனால் ஆற்றல் குறைவதற்கு மாறாக, அதனாலேயே ஆற்றல் பெருக்க மடைகிறது. கொடுக்கக் கொடுக்கக் குறையாது கூடும் பொங்கல் வளம் அதுபோலப் பிறிதில்லை.

4“வாழி! தனி வாழ்வினிலே தற்சார்புகொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவாழ்வின் ஒளிகண்டு பாழ்பழிகள் கூறுமவர் பாராமல் அகத்தே

தாழ் ஒளியில் தாழ்ந்தொளிரும் தகையாளர் வாழியே! தாழ்ஒளியின் தாள்தொடரும் தகையாளர் வாழியே!!

அடிக்குறிப்புகள்

1. "By all means use to be alone.

2.

3.

Salute thyself; see what thy soul doth wear."- George Herbert.

"He that has light within his own clear breast May sit in the centre and enjoy bright day.”

'This thing is God-to be man with thy might, To grow great in the strength of thy spirit, And live out thy life as the light."

-Milton.