288
அப்பாத்துரையம் - 29
இதனை ஊதாரிப் புதல்வன் கதை குறித்துக் காட்டுகிறது.
முதலில் அருமையறியாத நிலையில் அருகிருந்தும் நுகரப் பெறாத அவன் தந்தையகத்தின் வாழ்வு பேரின்ப வாழ்வின் இயற்கை நிலை போன்றது. அதிலிருந்தகன்று தொலைநாட்டுப் புறவாழ்வில் அல்லலுற்று, மீண்டும் அத்தந்தையகத்தின் அருமை யுணர்ந்ததே, அவன் அதனை நோக்கிவந்து அமைதி பெறு கிறான். அவன் தொலைநாட்டு வாழ்வின் அல்லல்கள் மனிதன் தற்பற்றார்ந்த புல அவாக்களின், புறவாழ்வின் அழற்சி சுழற்சிகளே. ஊதாரி மகனுக்கு அவன் உள்ளத்தினுள் எழுந்த அனுபவமற்ற அறியாப் பேராவலன்றி எதிர்கள் இல்லாதது போல, மனிதனுக்குப் பொறி புலச் சார்பான தற்பற்றவாக்கள் தவிர வேறு பகை கிடையாது.
மூவுலக மரபின் மெய்மை
அவாக்களுக்குரிய இச்சிக்கல்கள் உள்ளத்தின் மனிதப் பகுதியல்ல, அதன் விலங்குப் பகுதியே. அவற்றைக் கீழடக்கி மனிதப் பகுதியை வலுப்படுத்தும் அளவிலேயே அவன் மனிதனாகிறான். விலங்குப் பகுதியை முற்றிலும் அழித்து, மனிதப் பகுதியை முழுநிறைவாக்கிய நிலையே தெய்வநிலை. விலங்குப் பகுதியை நரகமென்றும், மனிதப் பகுதியை நிலவுலக மென்றும், தெய்வப் பகுதியை வானுலகம், இன்ப உலகம், பொன்னுலகம் என்றும் அறிவுச் சமயங்களை ஆக்கிய அறிவு முதல்வர் உருவகப்படுத்தினர். பிற்றைச் சமயவாணர் அவ் வனுபவ உண்மை உணராது உருவகத்தைச் சொற்பொருளின் பருநிலைக் கூறுகளாகக் கொண்டு தடுமாறினர்.
முதலில் பேரின்பத்தின் பாதை கரடுமுரடாகவும் கடுஞ் சிக்கல் வாய்ந்ததாகவுமே தோற்றுகிறது. ஏனெனில் அதன் நரெளிமை காணவொட்டாமல், அவாக்கள் அறிவைக் குரு க்குகின்றன. எளிமையை எடுத்துக்காட்டும் இயற்கையின் நேர் ஒழுங்குகள் அப்போது தென்படுவதில்லை. ஆனால் மனத்தின் மாசகலுந்தோறும் பட்டையிட்ட வைரம் ஒளி நிழற்படுத்திக் காட்டுவது போல, மனமும் அவ்வொழுங்குகளை எதிரொளி வீசிக்காட்டும்.
யை