(304) ||
அப்பாத்துரையம் - 29
இதே காரணத்தினால் சமுதாய அமைதிகளில் இருப்பது போல உயிர்த்துடிப்புடைய அமைதி, காலங்கடந்த சட அமைதி அல்லது ஆசாரம் என்பவையும் ஆன்மிகத் துறையில் கிடையாது. இயற்கை யமைதிகள் போலவே அவை எங்கும் எப்போதும் எல்லா வகையிலும் முழுநிறை இயக்கமுடையவை.
சமுதாயமும் அரசியலும் மனிதவாழ்வு, உயிர்வாழ்வு சார்ந்தவை. எனவே உயிர் வாழ்வுபோல அவை காலத்திலும் இடத்திலும் வளர்பவை. அவற்றின் அமைதி இயற்கையமைதியி லிருந்து ஓரளவு வேறுபடுவதன் காரணம் அதுவே. ஆனால் உயர் உயிர்வாழ்வாகிய மனித வாழ்வின் மனிதப் பகுதியான தெய்விக வாழ்வு அல்லது ஆன்மிக வாழ்வு இயற்கை வாழ்வு போன்றது. உயிர்வாழ்வு கடந்த இயற்கையின் மறுபதிப்பே அது. உயிர் வாழ்வின் கீழ்ப்படி கடந்து, இயற்கை நோக்கி வளரும் மனிதன் வாழ்வுக்கூறு அது.
இயற்கைக்கு அடிமைப்பட்ட வாழ்வே கீழ் உயிரின வாழ்வு. இயற்கையுடன் ஒன்றுபட்டு இழைவதே உயர் உயிரின வாழ் வாகிய மனிதவாழ்வு. உயிரின வாழ்வுப்படியின் பிடியிலிருந்து விலகியவுடன் மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக, இயற்கை யோடொத்த, இயற்கையோடொன்றிய வாழ்வாக ஆம் வகை இதுவே.
கடவுளாதல்,கடவுளுடன் இணைதல்,கடவுளை அணவுதல், கடவுளுருவாதல், கடவுட் பண்பளாவுதல் என்று உயர் சமய அறிவேடுகள் உருவகப்படுத்தும் முழுநிறை மனிதப்படி இதுவே. யற்கையின் மாறாக் கடுநேர்மை
உ
உலகியல் அமைதி, இயற்கை அமைதி ஆகியவற்றைப் போலவே ஆன்மிக அமைதியும் முழுநிறை உயிர்ப்பு, முழு நிறை இயக்கம், விலக்கு விதியற்ற நிறை செயல், கட்டாய விளைவு ஆகிய பண்புத் திறங்களை உடையது. அவற்றைப் போலவே அணுவும் பிசகாத வாய்மையுடையது. ஏனெனில் கைகண்ட இயற்கை யமைதியின் கண்கண்ட நிழற்கூறே உலகியல் அமைதி.இரண்டன் கண்காணா உள்ஒளிக்கூறே ஆன்மிக அமைதி. இயற்கை ஆன்மீக வாழ்வின் நிழல், அதன் உருப்படிவமாதிரி. அதுபோல உலகியல் வாழ்வு தெய்விக மெய்யுணர்வின் நிழல், அதன் உருப்படிவ மாதிரி.