பேரின்பச் சோலை
305
உலகியல் வாழ்வில் அனுபவத்தால் மனிதர் அறிந்து, அட்டியின்றி, கேள்வி பதில் ஆராய்வுகூட இன்றி, இயல்பாகப் பின்பற்றுகிற சிறு நேரமைதிகள் யாவும், அதே நுணுக்க விரிவு விளைவுகளுடன், அதே வகை அணுப்பிசகில்லா நிலையில் ஆன்மிக வாழ்விலும் செயலாற்றுகின்றன. ஆனால் உலகியல் வாழ்வில் அவ்வமைதிகள் கண்கூடான நீடித்த இடைவிடா அனுபவம் காரணமாக இயல்பாகப் பின்பற்றப்படும். ஆன்மிக வாழ்விலோ, இன்ப துன்பங்களின் நீடித்த அனுபவம் வரும்வரை அதே வகையாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த அனுபவ அறிவுதான் மெய்யுணர்வு ஊன்றி நிற்கும் அறிவு நிலம். இதை அடைந்தவுடனே ஐயங்கள் தீர்கின்றன.
ா
துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றின் இருள் மெய்யறிவின் ஒளிபெற்றுத் தெளிவடைந்தவுடனே, அஃது இன்ப உருவா கின்றது. இன்பங்கள் ஒளிதரும் மெய்யறிவுக் கதிரவனுக்குரிய வழிகாட்டிகள், திசைகாட்டிகள் ஆகின்றன.
வாழ்க்கை சிக்கலுடையதன்று, வளைவு நெளிவுடையதன்று கோடா நடுநேர்மையும் நெறிதிறம்பாக் கட்டெளிமையும் உடையது. அதன் இயக்கம் நேர்மைக்கும் நியதிக்கும் கட்டுப் பட்டது. ஒழுங்கமைதிகள் கால தேசச் சூழல்களால் மாறு வனவல்ல. அவற்றின் மாறுபடும் தோற்றத்தால் மாறுபட்டுத் தோன்றுபவை மட்டுமல்ல. அம்மாறுபாடுகளே தவறான நோக்கினால், அறியாமையால், மடமையால் ஏற்பட்டவை. விருப்பு, வெறுப்பு உணர்ச்சித் தூண்டுதல் ஆகியவை இம் மடமையின் கோட்டங்களுக்கான காரணம் ஆகும். யற்றவை அமைதியும் அன்பும், ஒழுங்கமைதிகளின் நேர்மையைக் காட்டும் பண்புகள் இவை. அவற்றின் நடுநேர் கோடும் (Latitude) நடு நிரைகோடும் (Longitude) என அவற்றைக் கூறலாம்.
ம்
வை
இயற்கைக்கு வேண்டுதல் வேண்டாமை, சலுகைக்குரிய வர்கள் கிடையாது. அது கடுநேர்மை, ஒருதலை கோடா நடுநிலை உடையது. ஒவ்வொரு மனிதனுக்கும் அஃது உரிய தகுதியே அளிப்பது. ஒழுங்கமைதிகளின் நோக்கில் எல்லாம் நல்லவையே, நல்லவை கெட்டவை என்ற வேறுபாடு கிடையாது. மனிதன் வ்வொழுங்கமைதி வழியன்றி வேறு நன்மை தீமை காண்டலரிது. ஒழுங்கமைதி அறிந்தொழுகினால், அவன்
ம