(306) ||
அப்பாத்துரையம் - 29
நடுநேர்வழி செல்ல முற்படுகிறான். அது கண்டபின் மகிழ்வும் இன்பமும் உவகையுமே அவனுக்குரியன.
துன்பமுட்பட அருளாளர்க்கு யாவும் இன்பமயம்
இயேசுபிரான் கண்டுணர்ந்து கூறிய ஒளியுலகத் தந்தை தளரா நன்மை உருவினர். எல்லாப் பொருளின் அமைதிகளி னூடாகவும் அவற்றையே தன் ஒளிக் கதிர்களாகக் கொண்ட இயங்கும் ஒளிப்பிழம்பு அவ்வுரு. நல்லவனுக்கு வாழ்விலோ மாள்விலோ தீங்கு எதுவும் நேர முடியாது என்று அவர் உறுதி கூறியதன் மறைதிறவு இதுவே. தம் முடிவில் இயேசுபிரான் நலனே கண்டார். தன்னைத் துன்புறுத்தியவரிடம் குறைகாண, தீமை காண அவர் மறுத்தார். 'எவரும் என்னிடமிருந்து என் உயிரை எடுக்கவில்லை. நானே அதை மனமார ஒப்படைக் கிறேன்', என்பது அவர் இறுதி அருள்வாசகம். தம் முடிவுக்கு அவர் யாரையும் காரணமாகக் கருதவில்லை. தாமே அதன் செயற்காரணம் என்பதை அறிந்து ஏற்று விளக்கினார்.
ம
வாழ்வை எளிமையுடையதாக்கி, உள்ளத்தைத் தூய்மை யுடயதாக்கிக் கொண்டவன் இயற்கையின் இயலெளிமையாகிய அழகுணர்வில் ஈடுபடுகிறான். அதுவே மெய்யுணர்வு. அதுவே தூய நல்லுணர்வு. அந்நிலையில் அவன் எல்லாப் பொருள் களிலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் இயற்கையமைதியின் மாறாத உறுதிப் போக்கைக் காண்கிறான். இதன் பின்னணியாக, அவன் தன் கருத்துக்கள், செயல்கள், பண்புகளின் தன்மையைப் புற உலகில் அவற்றால் ஏற்படும் விளைவுகளிலிருந்து உணர்கிறான். அவை தன் உளப்பண்புகள் இயக்கும் வழிகளையே தம் இயக்கமாகக் கொண்டுள்ளன என்று அவன் உணர்கிறான்.
இதன்பின் இயற்கையை இயற்கைவழி நின்று இயக்குவது எளிதாகிறது. இன்பந்தரும் கருத்துக்கள், இன்பந்தரும் சொற்கள், இன்பந்தரும் செயல்கள், இன்பம் பரப்பும் பண்புகளை அவன் வளர்க்கிறான். கருத்தும் சொல்லும், செயலும் பண்பும் இன்பத்தில் கருவுற்று, இன்பத்தில் முதிர்ந்து, இன்பத்தில் வளர்ந்து, இன்பத்தில் இன்ப உருவாக நிறைவுறுகின்றன. அறியாமையின் பயனாகச் செய்யப்படுகின்ற செயல்கள், அவற்றுக்குத் தூண்டுதலான சொற்கள், அவற்றுக்கு மூல முதலான அகப் பண்புகள் விலக்கப்படுகின்றன.