உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

இலட்சிய வரலாறு


மாயமான் வேட்டையில் 'மாடமாளிகைக்காரர்கள்'

திராவிட இன உணர்ச்சிக்காக எடுத்துக் கொண்ட முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது, மக்களுக்கு ஆர்வம் ஏற்படாமல் போனதால் அல்ல; நமது தலைவர்கள் அரசியலை மட்டுமே கவனித்து சமுதாயத்தில் தலையிடுவதைத் தவறு என்று எண்ணியதால். ஒரு இருபதாண்டுகள் மாயமான் வேட்டையில்-மந்திரிப் பதவி அமைப்பதில், அதாவது சுயநல வேட்டைக்கு, அதன் விளைவாக, சதியாலோசளைகளுக்குச் செலவிடப்பட்டன. அந்தக் காலத்திலே, மாளிகை சதியாலோசனை மண்டபங்களாயின! ஆள் தூக்கிகள் அரசியல் சூத்திரதாரிகளாயினர்! பதவி தேடுவோர், அரங்கமேறினர்! பரங்கிக்கும் கொண்டாட்டம், மக்கள் இந்தக் காரியம் தங்களுக்கு அல்ல என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டு கட்சியைக் கண்டிக்கவே தொடங்கினர். மாளிகைகளிலே சதிச்செயல்கள், கட்டுக்கடங்கா நிலைபெற்று ஒருதலைவர் இன்னொரு தலைவரை வீழ்த்துவதையே தொழிலாகக் கொண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, கும்பலாகச் சாய்ந்தனர். அந்த அதிர்ச்சியிலே, ஆரம்பத்திலே ஆர்வத்துடன் கிளம்பிய திராவிட இன உணர்ச்சி மங்கிற்று; மடியவில்லை. அந்த உணர்ச்சி, என்றுமே மடிந்ததில்லை— அடிக்கடி மங்கி இருக்கிறது — ஏனெனில், அந்த உணர்ச்சி, உள்ளத்தின் பேச்சு — அரசியல் வெட்டுக்கிளிகள் கூச்சல் அல்ல.

ஆரியத்தின் அணைப்பில் அவதியுற்ற திராவிடம்

இங்கு நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது. சில நேரத்தில் செயலற்று இருந்தது என்றபோதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை. அடிக்கடி தனித்தமிழ், வேளாள நாகரிகம், உண்மைச் சைவம், பண்டை நாகரிகம், என்று பல்வேறு தலைப்புகளிலே கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறு சிறு பதிப்புகளேயாகும். இவை ஒவ்வொன்றும், தேவை, பலனுமுண்டு இவைகளால் என்று போதிலும், இவை, மக்களில் ஒரு சிலரால் மட்டுமே உணரக்கூடியதாக இருந்த காரணத்தால், மூல முயற்-