உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அப்பாத்துரையம் - 30

புன்முறுவலும் அவர் முகத்தில் எப்பொழுதும் ஒளி வீசின. கடற் படையிலே வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்து, மன்னர், இளங்கோக்களால் மதிப்புப் பெற்ற அவர் தம் வாழ்க்கையின் மாலைப் போதை இன்பமாகக் கழிக்கவே பாரிஸ் வந்திருந்தார். அவர் குடும்பம் ஐரோப்பாவின் மன்னர் குடிகளுடன் பழந்தொடர்பு கொண்டது - ஃபிரஞ்சு அரசரும் ஆஸ்திரிய அரசரும் தாங்கள் சிட்னி கால்வழியில் வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொண்டனர்.

லாரைனின் கனவுருவம் இந்நனவுருவத்தைச் சுற்றியே வட்டமிட்டது.

சிட்னி சிராம்மோன் வீரர் மட்டுமன்று; நல்ல பண்பு முடையவர்.லாரைனுடன் அவர் தந்தைபோல் பழகினார்; தந்தை போலவே நடந்து கொண்டார். ஆயினும் அவள், அவர் உரையாடுமிடத்தில் வந்ததும், அவர் பேச்சிலும் உள்ளக் கிளர்ச்சியிலும் மாறுதல்கள் ஏற்படவில்லை. அவர் நண்பராகிய லாரைனின் மாமன் திரு மான் காண்டர் இது பற்றி அவருடன் குறும்புக் கேலி செய்வதுண்டு. அவர் வயது இதனை ஓர் இன்ப வேடிக்கையாக்கப் போதியதாயிருந்தது. லாரைனின் அமைந்த ஆராய்ச்சித் திட்டம் இவ்வேடிக்கையை வினையாக்க முனைந்தது.“ஆம் அவருக்கு என் அன்பு தேவை; எனக்கும் அவர் அன்பு தேவை. நான் அவரை மதிக்கிறேன். அவர் மிகவும் நல்லவர், நற்பண்புடையவர். அவர் தீங்கெண்ணமாட்டார். நல்லெண்ண முடையவர். நம்பிக்கைகேடு செய்யும் கூட்டத்தவரல்லர் அவர். ஆம்! நான் துணிந்துவிட்டேன்.இது என் முடிவு. என் மாமாவிடம் இது பற்றிக் கலந்தாராய்வேன்” என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள்.

தூய அல்லிமலர் போன்ற அவள் உள்ளத்தில் மெல்லிய செந்நிற ஒளி படர்ந்து பரவி ஓடிற்று. கலையை உடையாகக் கொண்ட அவ்வெழுத்தாளர் நங்கை புதிய கருத்தார்வத்துடன் உடையில் கலையார்வம் கொண்டாள். பகட்டான அக்கால உடைகளை அவள் மேற்கொள்ளவில்லை-ஆனால், அவள் கலை தேர்ந்த எளிமை பகட்டை விடப் பகட்டுவதாயிருந்தது. நீலக் கோடிட்ட தூய வெள்ளாடை அதன்மேல் சிவந்த கச்சை, இவை அவள் இயற்கை யழகைப் பல மடங்கு பெருக்கிக் காட்டின.புது