உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 32

ஆயினும் நான் என்ன முயன்றும் அவளை மறக்க முடியவில்லை. அவளை நான் மணந்துகொள்ள விரும்புகிறேன். அதே சமயம் உன்னையும் என் அரண்மனைத் தெய்வமாக, நாட்டின் அழகுத் தெய்வமாக, நானும் திருகுவளையும் வைத்துப் பேணுவோம், நாளையே அவளை நான் மணக்க வேண்டும். அதற்கு வாய்பேசா உன் வாழ்த்துரையையே வேண்டுகிறேன்.” என்று கூறி அவன் அவளை ஆதரவுடன் தழுவிக் கொண்டான்.

அவள் உடலில் மின்சாரக் காந்த அழல் எரியத் தொடங்கிற்று. அவள் காதல்கோட்டை மெழுகாய் உருகிற்று. ஆயினும் அவள் உள்ளத்தில் ஒரு புதிய தெம்பு எழுந்தது. இளவரசன் காதலுக்காக வாழ்வதே இதுவரை அவள் கட்டிய மனக்கோட்டை, அதே காதலுக்காக மாள்வது இப்போது ஒரு புதிய இன்பமாக அவளுக்குத் தோற்றிற்று. அவள் கண்கள் புதுமொழி பேசின. இளவரசன், அதை உணர்ந்து கொண்டான். அது அவன் புது மண வாழ் விற்குரிய வாழ்த்துரை என்று உணர்ந்தான். அவன் உள்ளம் பாகாய் உருகிற்று.

வேல்விழியை விட்டு இளவரசன் பிரிந்து சென்ற மாலை வேளைகளிலெல்லாம். அவன் உண்மையில் திருகுவளையையே தேடிக் கொண்டிருந்தான். திருகுவளையும் அவனை நாடி மாமன் வீட்டில் வந்து காத்திருந்தாள். அவர்கள் சந்தித்தனர். மீண்டும் அளவளாவிப் பேசினர். அவர்கள் இப்போது தங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை, தங்களைக் கூட்டி வைத்த மாயக் கடல் நங்கை பற்றியும் பேசினர்.

மாய நங்கையும் தன்னைப் போலவே இளவரசனிடம் மாறாத பற்றுக் கொண்டவள் என்பதைத் திருகுவளை அறிந்தாள். அவள் நிலை கண்டு அந்த நங்கை மனம் கசிவுற்றாள். "அன்பரே, அவள் என்னைப் போலவே ஒரு பெண். அத்துடன் வாய் பேசாதவள், ஆதரவற்றவள், அவள் மனம் அறிந்துதான் நான் உங்களை மணந்துகொள்ள முடியும். ஆனால் அவள் ணங்கினால், அவளை என்னுடன் என் தங்கையாக, நம் குடும்ப விளக்காக வைத்துப் பேண உறுதி கொண்டுள்ளேன். அவள் மனங் கோணாமல் நீங்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா" என்று அவள் இளவரசனிடம் கூறினாள்.