உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

29

சின்னஞ்சிறு பறவைகளின் கலகலப்பு அவனைத் தட்டி எழுப்பிற்று.இலைதழைகள், காய்கனிகள் அவனுக்கு உணவாயின. ஓடை கேணிகள் பருக நீர் அளித்தன, மலர்களின் பொலிவு அவன் அயர்வு நீக்கி, உள்ளக் கிளர்ச்சியூட்டிற்று.

ஒரு நாள் அவன் ஒரு பெரிய பாழடைந்த கல்லறை மாடத்தில் தங்கவேண்டி வந்தது. அங்கே, பல கல்லறை மேடைகள் சிதைந்த நிலையில் கிடந்தன. இளஞ்சாத்தன் தன்னாலியன்ற மட்டும் அவற்றைத் துப்புரவு செய்தான். காட்டு மலர்களால் அவற்றிற்குப் பூசனை நிகழ்த்தினான். தந்தையின் கல்லறையை இச்சமயம் அவன் நினைத்துக் கொண்டான். தான் பிறர் குடும்பக் கோவில்களுக்கு மலர்ப் பூசனை செய்தால், தன் குடும்பக் கோயிலுக்கும் அதுபோல வேறு யாராவது மலர்ப் பூசனை செய்யக்கூடும் என்று அவன் எண்ணினான். அவ்வாறே அவன் அன்றிரவு கனவும் கண்டான். ஏனெனில் அவன் அக்கல்லறை மாடத்திலேயே அமைதியாக உறங்கினான்.

காலையில் அவன் எழுந்தான். கை, கால், அலம்பி மீண்டும் பயணம் தொடங்க முனைந்தான். ஆனால் மாடத்தின் ஒருபுறம் அவன் ஒரு புதுமையான காட்சி கண்டான். நிலத்தில் ஒரு சிதை கிடந்தது. அதில் கவலையற்று உறங்குவதுபோல் ஓர் அமைதியான மனித வடிவம் கிடந்தது. அதற்கு உயிரில்லை. ஆனால் அதைச் சுற்றி நாலு முரடர் நின்றனர். அவர்கள் அதை மாறி மாறிக் கழியால் அடித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் தம் வாயார அவர்கள் இறந்தவனை வைது பழித்தார்கள்.

இக்கொடுஞ் செயல்கண்டு இளஞ்சாத்தன் நெஞ்சம் பதைத்தது. அவன் அவர்களை அணுகினான். "ஐயன்மீர், இது என்ன கோரச் செயல் செய்கிறீர்கள்? இறந்த உயிருக்குக் காட்டும் மதிப்பு இது தானா?" என்று கேட்டான்.

அவர்கள் சீறிவிழுந்தார்கள். "உனக்கென்ன வந்தது போ, அவன் எங்களுக்கு நாற்பத்தைந்து பொன் தர வேண்டும் பணம் தராமல் தப்பி ஓடி விட்டான். ஆகவேதான் அவன் உடலுக்குத் தண்டனை அளிக்கிறோம்" என்றார்கள்.

ளஞ்சாத்தன் ஒன்றும் மறுமொழி பேசவில்லை. சட்டென மடியில் கையிட்டான். அவன் செலவு செய்தது போகக் கணக்காக நாற்பத்தைந்து பொன்கள் இருந்தன. அவற்றை அவன்