உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. வழித்துணை வேலன்

அரியக்குடி ஒரு பழமை வாய்ந்த தமிழ் நகரம். அங்கே முதுசாத்தன் என்ற ஒரு வணிகன் இருந்தான். அவன் தமிழார்வம் உடையவன். ஈகைக் குணமுடையவன். அவனுக்குச் செல்வமும் பொங்கி வந்தது. ஆனால் திடுமென அவன் வாழ்வில் புயல் மூண்டது. அவன் வாணிகம் நொடித்துப் போயிற்று. அவன் மனைவி ஒரு புதல்வனை ஈன்றாள். ஆனால் புதல்வன் பிறந்ததை அடுத்து அவள் உயிர் நீத்தாள். வறுமையைப் பொருட்படுத் தாமல் முதுசாத்தன் அப்புதல்வனை அருமையாக வளர்த்தான்.

முதுசாத்தன் மனைவியின் பெயர் இளநாகு. மைந்தனுக்கு அவன் மனைவியின் பெயரையும் தன் பெயரையும் சேர்த்து, இளஞ்சாத்தன் என்று பெயரிட்டான். இளஞ்சாத்தனிடம் தாயின் பொலிவும். தந்தையின் அறிவும் ஒருங்கே குடிகொண்டிருந்தன. அவன் நற்குணம் இருவருக்கும் நற்பெயர் அளிப்பதாயிருந்தது.

இளஞ்சாத்தனுக்குப் பதினைந்தாண்டு நிறையுமுன்பே, முதுசாத்தன் நோய்வாய்ப்பாட்டான், வரவர, அவன் உடல் வலிமை கெட்டு வந்தது. ஒரு நாள் அவன் மைந்தனைத் தன் அருகே அழைத்தான். “கண்மணி, நீ உன் தாயை உரித்து வைத்ததுபோல் இருக்கிறாய். எங்கும் நல்லவன் என்றும் பெயரெடுத்திருக்கிறாய். நம் முன்னோர்கள் 'வாழ்வு' உன் காலத்தில் மீண்டும் தழைக்கும் என்ற உறுதி எனக்கு உண்டு. ஆனால் அதைக் காண நான் இன்னும் நீண்டநாள் இருக்க மாட்டேன் என்று எண்ணுகிறேன். ஆயினும் எனக்குப்பின் நீ கவலையடையாதே. உனக்கு நான் பணமாக மிகுதி வைத்துப் போகவில்லை. ஆயினும் உன் குடிப்பெயரும் உன் வாய்மையுமே உன்னைக் காக்கும். அத்துடன் நான் உனக்கு இப்போது சொல்லும் வாய் மொழியையும் நீ மறவாதே. “எல்லாரிடமும் அன்புடையவனாய் இரு. கடமையை அஞ்சாமல் செய். அதன்