உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16.

17.

18.

19.

46

அப்பாத்துரையம் - 26

முயற்சியை விட்டுவிட மனமொப்பாமல், கோபக்கனல் கக்கும் கண்களுடன், அவர்கள் தம் பெரும் படைகளை எதிரெதிர் நடாத்தி வெங்குருதிப் போரிட்டனர். மாமுதல்வர் (புத்தர் பிரான்) அவர்களிடையே தோன்றினார். “இந்தப் பீடிகை எனது. ஆகவே பூசலை நிறுத்துங்கள்" என்றார். பின் அவர் அதன் மீதமர்ந்து அறநெறி சாற்றினார் மணிமேகலை, 8: 54-63.

மணிமேகலை 16:15 மனிதரைத் தின்னும் மனித இனத்தவர் வாழ்விடங்களாக டாலமி மூன்று தீவக் கூட்டங்களைக் குறிப்பிடுகிறார். இவற்றை “யூல்" (Yule) என்பார் நிக்கோபார், மார்க்கோபோலோ குறித்த நக்கவாரம், ரஷீத் உத்தீன் குறித்த லக்கவாரம் என்பதன் பெயராகக் கருதுகிறார். மக்கிரிண்டிலின் டாலமி. பக்கம் 236-239 காண்க.

மணிமேகலை 24: 164-170. டாலமி இந்தத் தீவை லபதாய்ஸ் (Labadois) அல்லது சபதாய்ஸ் (Sabadois) அதாவது வால் கோதுமை (யவதானிய)த் தீவு என்றும், அதன் தலைநகரை ஆர்கிரே (Argyre) அதாவது வெள்ளி நகர் என்றும் சுட்டுகிறார். மக்கிரிண்டிலின் டாலமி, பக்கம் 249.

நச்சினார்க்கினியர் நாடுகளின் சிறிது மாறுபட்ட ஒரு பட்டியல் தருகிறார். வேண், புன்னாடு ஆகியவற்றினிடமாக அவர் ஒளி நாடு, பொங்கர் நாடு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம்: சொல்லதிகாரம், சூத்திரம் 400.

பாண்டவர், பாண்டியர் பெயர்களும் யமுனைக்கரை மதுரை, வைகைக்கரை மதுரை ஆகியவற்றின் பெயர்களும் தொடர்புடையவை என்பதில் ஐயமில்லை. இத் தொடர்புகளுடன் மகாபாரதக் கதைக்கு இசைவு உண்டு என்பதும் இயல்பான ஒரு கருத்தே. ஆனால், புராண இதிகாசக் கதைகள் சமஸ்கிருதத்துக்கும் வடபுலங்களுக்கும் உயர்வளித்த ஒரு இடைக்காலப் போக்கை மிகைப்படுத்திக் காட்டுவன. அவற்றை அடிப்படை மெய்ம்மைகளாகக் கொண்ட கோட்பாடுகள் வரலாற்று முறையில் வலுவுடையன ஆகமாட்டா. தவிர இதேவகை வடக்கு, தெற்கு இசைவுகள் வேறு பல உண்டு. தமிழகத்திலேயே சோணாட்டுக்கும் பாண்டி நாட்டுக்கும் இடையிலும்: சோழ பாண்டி நாடுகளுக்கும் ஈழநாடு அல்லது இலங்கைக்கும், தமிழகத்துக்கும், கடல்கடந்த தென் கிழக்காசியப் பகுதிகளுக்கும் இதுபோன்ற பல இசைவுகள் உண்டு. சிந்து நிலத்திலும் தமிழகத்திலும் “பஞ்சாலம் என்ற ஊர்ப்பெயர், நாட்டுப் பெயர்கள், மலயம் என்ற மலைப்பெயர்கள், வங்கத்திலும் தமிழகத்திலும் பாண்டியர்” தாம்பரபர்ணி என்ற பெயர்கள். சோணாட்டிலும், பாண்டி நாட்டிலும் பாவநாசம், குற்றாலம் என்ற பெயர்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் திருநெல்வேலி போன்ற பெயர்கள், தமிழகத்திலும் கடல் கடந்த தென்கிழக்காசியாவிலும் மதுரை, மாறன் போன்ற பெயர்கள் ஆ கியவை இதிகாச புராணங்களால் விளக்கப்படத் தக்கவையுமல்ல. விளக்கப்படவுமில்லை. இவற்றுட் பல தமிழர் அரசியல், வாணிக, குடியேற்றப் பரப்புக்களின் சின்னங்கள் என்பது தெளிவு. வடக்கு தெற்குத் தொடர்பு வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பொது இன மரபு, குடிப்பெயர்வு முதலிய தொடர்புகள் குறித்தன ஆகலாம்.

20. மணிமேகலை 13:13.