உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம் - 26

பெருகிப் புதுக்கடல் முகமாயிற்ற. 'பொய்முகம்' என்ற பெயரின் காரணம் இதுவே.

ஆற்றின் சரியான பெயர் பெரியாறு அல்லது பொருநை என்பது. இந்த ஆற்றுக்கு 500 ‘ஸ்டேடியா' அதாவது 58 கல் தெற்கே, பரிஸ் என்ற ன்னொரு ஆற்றை டாலமி குறிப்பிடுகிறார். பண்டை இந்தியா பற்றிய டாலமியின் விரிவுரையை ஆராய்ந்த புலவர்கள் எவராலும், பரிஸ் ஆறு எது என்பது பற்றியோ, முஸீரிஸுக்கும் குமரிமுனைக்கும் இடையே அவர் குறிப்பிட்டுள்ள நகர்கள் எவை என்பது பற்றியோ தெளிவான முடிவு இல்லாதிருந்து வந்துள்து. எனக்கும் இதே சிக்கல் இருந்து வந்தது. ஆனால் ஒரு நாள் ஆலப்புழையிலிருந்து படகு வழியாக் கோடயம் சென்று கொண்டிருந்தேன். நான் இறங்கவேண்டிய இடம் வைக்கரை என்று படகோட்டி தெரிவித்தான். இது உடனே என் மனத்தில் டாலமியின் பக்கரையை நினைவுக்குக் கொண்டுவந்தது. இது என்னை மீண்டும் ஆராய்ச்சியில் தூண்டிற்று.

மேலும் உசாவியதில், கோட்டயத்தில் படகு இறங்கும் துறையின் பெயர் வைக்கரை என்றும், அதன் அருகே திவான் பேஷ்கார் (உதவி முதன்மந்திரி) மாளிகை இருந்த மேட்டின் பெயர் வைக்கரைக் குன்று (வைக்கரைக் குன்னு) என்றும் அறிந்து மகிழ்ந்தேன். அத்துடன் கோட்டயத்தின் வழியாக ஓடிய ஆற்றின் பெயர் பாலை அல்லது பாலி என்றும் கேள்விப்பட்டேன்.பக்கரை அருகே யுள்ளதாக டாலமி கூறும் பரிஸ் ஆற்றுடன் இது இசைவாயமைந்தது. எனவே பக்கரை என்ற பண்டைத் துறைமுகம் கோட்டயத்தருகிலுள்ள வைக்கரை என்ற இன்றைய சிற்றூரே என்று முடிவாகக் கண்டுணர்ந்தேன்.எ

61

முசிறிக்கும்,பக்கரைக்கும் இடையே கடற்கரையிலிருந்தவை என்று டாலமி குறிப்பிட்ட நகரங்கள் பொடொபெரூரா, செம்னெ, கொரியூரா ஆகியவை.

அவை

உண்மையில்

காயல்களின் கீழ்க்கரை யிலிருக்கும் உதியம்பேரூர், செம்பை, கொத்தோரா ஆகிய நகரங்களுடன் இசைவது காண நான் வியப்படைந்தேன்.